லோக்சபா தேர்தலில் போட்டியிடாதீர்கள்: ராஜ் தாக்கரேவிடம் பாஜக கெஞ்சல்
மும்பை: லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவை பாஜக வலியுறுத்தியுள்ளது.
பாஜக மூத்த தலைவர் நிதின் கட்காரி மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரேவை மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று மதியம் சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் ராஜிடம் கூறுகையில், வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் பாஜக-சிவசேனாவுக்கு உதவுங்கள். இல்லை என்றால் சில தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்துங்கள் என்று தெரிவித்துள்ளார்.

வரும் அக்டோபர் மாதம் நடக்கும் மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் கூட்டணிக்கு வருமாறு ராஜ் தாக்கரேவுக்கு பாஜக அழைப்புவிடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து கட்காரி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ராஜ் தாக்கரேவிடம் கூறினேன் அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டால் காங்கிரஸுக்கு எதிரான ஓட்டுகள் பிரிந்துவிடும் என்று. மகாராஷ்டிரா நவநிர்மன் சேனாவால் காங்கிரஸ் நன்மை பெறுவதை விரும்பவில்லை. அதனால் தேர்தல் போட்டியிடாதீர்கள் இல்லை என்றால் எங்கள் வேட்பாளர்களுக்கு உதவுங்கள். அப்படி போட்டியிட்டால் முடிந்த அளவுக்கு குறைவான தொகுதிகளில் போட்டியிடுங்கள் என்று ராஜிடம் தெரிவித்தேன்.
பாஜக தலைவர் ராஜ் தாக்கரேவை சந்தித்து பேசியது பாஜகவுடன் நீண்ட காலமாக கூட்டணி வைத்துள்ள சிவசேனாவுக்கு பிடிக்கவில்லை.
ராஜ் தாக்கரே கடந்த 2005ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிவ சேனாவில் இருந்து வெளியேறி மகாராஷ்டிரா நவநிர்மன் சேனாவை நிறுவினார். 2009ம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 288 சீட்களில் 13-ஐ ராஜ் தாக்கரே கட்சி வென்றது. அவரால் தான் பாஜக-சிவசேனா கூட்டணி 55 சீட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
மேலும் கடந்த முறை நடந்த லோக்சபா தேர்தலிலும் ராஜ் தாக்கரே கட்சிக்கு கணிசமான வாக்குகள் சென்றதால் தான் பாஜக தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications