கோவா, உத்தரகாண்ட்டில் ஆபரேஷன் தாமரை? மீண்டும் காங். எம்.எல்.ஏக்களை தூக்கி ஆட்சி அமைக்குமோ பாஜக?
பனாஜி/ டேராடூன்: கோவா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் தொங்கு சட்டசபைக்கான வாய்ப்புகள் உள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் (எக்ஸிட் போல் முடிவுகள்) தெரிவிக்கின்றன. இதனால் சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. இன்னொரு பக்கம், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டு வழக்கமான பாணியில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புகள் அதிகம் என்கின்றன தகவல்கள்.
40 இடங்களை கொண்ட கோவா மற்றும் 70 இடங்களை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்கின்றன தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நேற்று வெளியாகின. உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7வது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் இந்த எக்ஸிட் போல் முடிவுகள் வெளியிடப்பட்டன.

எக்ஸிட் போல் முடிவுகள்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக; பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும் என திட்டவட்டமாக கூறியுள்ளன எக்ஸிட் போல் முடிவுகள். அதே நேரத்தில் கோவாவில் காங்கிரஸ், பாஜக இரண்டுமே தலா 16 இடங்கள் வரை பெறக் கூடும்; மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும்பான்மைக்கு குறைவான இடங்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்பதும் எக்ஸிட் போல் முடிவுகள்.

கோவா காங். உஷார்
கோவாவைப் பொறுத்தவரையில் ஆட்சி அமைக்க 21 இடங்கள் தேவை. இதனால் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுடன் இப்போதே தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை காங்கிரஸ் மேற்கொண்டுள்ளது. மேலும் கடந்த 2017-ம் ஆண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக வளைத்துப் போட்டு கோவா சட்டசபையில் பெரும்பான்மையை காட்டியது பாஜக. அதே போன்ற ஒருநிலைமை இப்போது வந்துவிடக் கூடாது என்பதற்காக தேர்தலுக்கு முன்னரே கோவா காங்கிரஸ் வேட்பாளர்கள், கட்சி தாவ மாட்டோம் என சத்தியம் செய்து கொடுத்தனர். அடுத்த கட்சி எம்.எல்.ஏக்களை வளைக்கும் ஆபரேஷன் தாமரை குறித்து கோவா காங்கிரஸ் இப்போதே உஷாராகி இருக்கிறது.

ஆபரேஷன் தாமரை?
70 இடங்களைக் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 36 இடங்கள். பாஜக கூட்டணி 35 இடங்களில் வெல்லும் என்பது எக்ஸிட் போல் முடிவுகளின் கணிப்பு. இதனால் பாஜக எளிதாக ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இம்மாநிலத்தில் பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் போட்டியுடன் விஸ்வரூபம் எடுக்கும் எனவும் அக்கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் காங்கிரஸ் கட்சியின் ஒரு சில எம்.எல்.ஏக்களை இழுத்துப் போட்டு ஆட்சியை அமைத்துவிடலாம் என ஸ்கெட்ச் போட்டு வருகிறது பாஜக. இதனை உணர்ந்து கொண்ட உத்தரகாண்ட் காங்கிரஸ் தமது எம்.எல்.ஏக்களை எப்படி பாதுகாப்பது என்பதற்கான வியூகத்தை இப்போதே விவாதித்து வருகிறதாம்.

பாஜகவின் பார்முலா
பொதுவாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆபரேஷன் தாமரை என்ற பெயரில் கொத்தாக ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைப்பது; கொத்தாக எம்.எல்.ஏக்களை கட்சி தாவ வைப்பது... இதன் மூலம் ஆட்சியைக் கவிழ்த்து புதிய அரசை அமைப்பது என்பதை ஒரு அரசியல் கோட்பாடாகவே பாஜக கடைபிடித்து வருகிறது. தற்போதைய 5 மாநில சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் ஆபரேஷன் தாமரையை முழு வீச்சில் பாஜக அமல்படுத்தவே வாய்ப்புகள் அதிகம் எனவும் கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications