கர்நாடகா: எப்போது பாஜக பெரும்பான்மையை நிரூபிக்கும்... இன்று அறிவிப்பு வெளியாகிறது!

இன்று கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்ற பின், பாஜக கட்சி எப்போது சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க போகிறது என்ற அறிவிப்பு வெளியாகும்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கர்நாடகாவின் 23வது முதல்வராக பதவி ஏற்றார் எடியூரப்பா!

    பெங்களூர்: இன்று கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்ற பின், பாஜக கட்சி எப்போது சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க போகிறது என்ற அறிவிப்பு வெளியாகும்.

    கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத காரணத்தால் பெரிய குழம்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. பாஜக 104 தொகுதிகளில் வென்று இருந்தாலும் அந்த கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்த போதும், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.

    BJP will announce the date of confidence motion today after swearing ceremony

    இந்த நிலையில் 104 எம்எல்ஏக்களுடன் இன்று எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ஆட்சி பொறுப்பேற்க இருக்கிறது. எடியூரப்பா ஆளுநரிடம், பெரும்பான்மையை நிரூபிக்க 7 நாள் அவகாசம் கேட்டு இருந்தார், ஆளுநர் அவருக்கு 15 நாள் அவகாசம் கொடுத்துள்ளார். இன்றிலிருந்து இன்னும் 15 நாட்களுக்குள் பாஜக கட்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

    இந்த நிலையில் இன்று, எந்த நாளில் எப்போதும் பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது என்ற அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இன்று எடியூரப்பா ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பார். அவர் பதவி ஏற்றபின் இந்த அறிவிப்பு வெளியாகும்.

    பாஜக கட்சியிடம் பெரும்பான்மை இல்லையென்றாலும், அவர்கள் இந்த விஷயத்தில் மிகவும் உறுதியாக இருக்கிறார்கள். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இல்லையென்றால் மதசார்பற்ற ஜனதாதள எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லாமல் பாஜக கட்சியால் ஆட்சி அமைக்கவே முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கர்நாடக அரசியலில் இன்னும் பல திருப்பங்கள் உருவாக காத்திருக்கிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+