ராஜஸ்தானில் காங். தோல்வியை தழுவும்-ஆட்சியை பிடிக்கும் பாஜக: இந்தியா டுடே 'எக்ஸிட் போல்'
டெல்லி: ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்திக்கும் என்றும் பாரதிய ஜனதா ஆட்சி அமைக்கிறது என்றும் இந்தியா டுடே நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் 200 தொகுதிகளுக்கான தேர்தல் அண்மையில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து வாக்காளர்களிடம் இந்தியா டுடே-ஓ.ஆர்.ஜி. இணைந்து கருத்து கணிப்பை மேற்கொண்டது.

இக்கருத்து கணிப்பின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. விவரம்:
காங்- 62 இடங்கள்
ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சி 62 தொகுதிகளைத்தான் கைப்பற்றுமாம். அக்கட்சி வசம் இருந்த 34 தொகுதிகள் பறிபோகிறதாம். கடந்த 2008 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 96 இடங்களைக் கைப்பற்றிருந்தது. வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை இது 34%. இதனால் முதல்வர் அசோக் கெலாட்டின் ஆட்சி முடிவுக்கு வருகிறது.
பாஜகவுக்கு செம மெஜாரிட்டி
200 தொகுதிகளில் பாஜகவுக்கு 110 தொகுதிகள் கிடைக்குமாம். கடந்த தேர்தலைவிட அக்கட்சிக்கு இது கூடுதலாக 32 இடங்கள். 2008ஆம் ஆண்டு பாஜக 78 இடங்களைப் பெற்றிருந்தது.
வசுந்தரராஜே மீண்டும் முதல்வர்
பாஜக ஆட்சியை கைப்பற்றக் கூடும் என்பதால் வசுந்தரராஜே மீண்டும் அம்மாநில முதல்வராகிறார். மொத்தம் 40% வாக்குகள் பாஜகவுக்குத்தானாம்.
எஞ்சிய 28 இடங்கள்
ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் இந்த இரு கட்சிகளைத் தவிர்த்த எஞ்சிய கட்சிகள் 28 இடங்களைக் கைப்பற்ற இருக்கிறதாம். இவற்றின் வாக்கு சதவீதம் 26%.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications