ஒரே வார்த்தை.. கங்குலிக்கு அடுத்த 'நெஞ்சுவலி'யை ரெடி செய்த பாஜக! வங்கத்து 'புலி' சிக்குமா?
கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி அடிக்கும் சிக்ஸர் போல மேற்குவங்கத்தில் பாஜக சிக்ஸர் அடிக்கும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைப் போல... இல்லை, இல்லை.. தமிழகத்தை விட ஒரு படி மேலாக மேற்குவங்கத்தில் தேர்தல் வெப்பம் அனல் வீசுகிறது. மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே அங்கு கடும் போட்டி நிலவுகிறது.
எப்படியாவது மம்தாவை ஆட்சிக் கட்டிலில் இருந்து இறக்கிவிட வேண்டும் என்று பாஜகவும், எப்பாடுபட்டாவது பாஜகவை உள்ளே நுழைய விடமாட்டேன் என்று மம்தாவும் கங்கணம் கட்டிக் கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

எண்ணமே இல்லை
இந்நிலையில், மேற்குவங்கத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலியை மம்தாவுக்கு எதிராக களமிறக்க பாஜக வியூகம் வகுத்து வருகிறது. இதற்காக, பாஜக சார்பில் கங்குலியிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால், கங்குலி இதுவரை தான் அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை என்று தொடர்ந்து இதுகுறித்த கேள்விகளுக்கு மறுத்து வருகிறார்.

ரசிகர்கள் அதிர்ச்சி
அதேசமயம், கங்குலியிடம் பாஜக பேசி வருவது உண்மை தான் என்றும், அவரை மேற்குவங்க அரசியலில் களமிறக்க பல்வேறு வகையில் அழுத்தம் கொடுத்து வருவதாக எதிர்க்கட்சிகளே கூறி வருகின்றன. தமிழகத்தில் ரஜினிகாந்தை களமிறக்க பாஜக முயன்றது போது, மேற்குவங்கத்தில் கங்குலியை களமிறக்கும் வியூகத்தில் பாஜக உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ஹார்ட் அட்டாக் காரணமாக கங்குலி இருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது நெஞ்சுவலி சம்பவத்திற்கு பிறகு பாஜக - கங்குலி குறித்த செய்திகள் குறையத் தொடங்கின.

பாஜக ஆட்சி
இந்நிலையில், மேற்குவங்கத்தில் தேர்தல் பரப்புரையில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மீண்டும் கங்குலியை மையப்படுத்தி பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், "கங்குலி கிரீஸை விட்டு வெளியே இறங்கி வந்தால், பந்து கண்டிப்பாக சிக்ஸருக்கு பறக்கும். அது போல உங்கள் ஆதரவுடன் கடந்த 2019 மக்களவை தேர்தலில், இங்கு பாஜக கிரீஸை விட்டு இறங்கி வெளியே வந்தது. இப்போது, சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் சிக்ஸர் அடித்து பாஜக ஆட்சியமைக்கும்" என்று தெரிவித்துள்ளார்

நெஞ்சுவலி வருமோ?
இதன்மூலம், சிறிது நாட்களாக சைலன்ட் மோடில் இருந்து கங்குலி மேட்டரை மீண்டும் தூசித் தட்டியுள்ளார் ராஜ்நாத் சிங். இதையடுத்து கங்குலி விரைவில் பாஜகவில் இணையப் போகிறார் என்ற செய்தி மீண்டும் றெக்கை கட்டி பறக்கத் தொடங்கியுள்ளன. அதேசமயம், அமைச்சரின் பேச்சால் மீண்டும் கங்குலிக்கு நெஞ்சுவலி வந்துவிடப் போகிறது என்றும் நெட்டிசன்கள் சமூக தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications