For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொல்கத்தா அமித்ஷா பேரணியில் பாஜகவினரின் வெறித்தனமான கோலி மரோ -துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள் கோஷம்!

Google Oneindia Tamil News

கொல்கத்தா: பாஜகவினர் இப்போது ஜெய் ஶ்ரீராம், பாரத் மாதா கீ ஜே ஆகிய கோஷங்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டார்கள்.. வன்முறையை தூண்டும் கோலி மரோ - துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள் என்கிற கோஷம்தான் இப்போது இந்துத்துவா கும்பலுக்கு தேசிய கீதமாகிப் போய்விட்டது.

மத்திய அரசின் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டங்களால் பாஜக உள்ளிட்ட இந்துத்துவா கோஷ்டிகள் வெறுப்பின் உச்சத்தில் இருக்கின்றன. அதுவும் டெல்லி ஷாகீன் பாக் போன்று தேசத்தின் பல பகுதிகளில் ஒரே இடத்தில் பல மாதங்களாக அமர்ந்து சி.ஏ.ஏ.வுக்கு எதிராக உக்கிரமான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

BJP workers raise goli maro slogan for Amit Shah rally

இந்த போராட்டங்கள் தொடருவதால் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்ற பாஜக கோஷ்டிகள், வன்முறையை தூண்டி இப்போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கின்றன. இதனைத்தான் டெல்லியில் வீதிக்கு வீதி பாஜக தலைவர்கள் பேசினர். அவர்களது பிரதான கோஷமே கோலி மரோ என்றாகிப் போனது. அதாவது துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள் என்பதுதான் இந்த கோஷம்.

இதனையே சில அடிவருடிகளும் ஏற்று டெல்லியில் அமைதிவழியில் போராடிய ஜனநாயக சக்திகள் மீது துப்பாக்கிக் குண்டுகளை தெறிக்க விட்டனர். ஆனாலும் பாஜகவினரின் எந்த ஒரு வன்முறை பாட்சாவும் பலிக்கவில்லை. இதன்விளைவாக வெறுத்துப் போய்தான் கோரத்தாண்டவமாடினர். இதற்கு சாட்சிதான் வடகிழக்கு டெல்லியின் வீதிகளில் ஓடிய ரத்த ஆறு.

கொரோனா வைரஸ்.. அமெரிக்காவில் முதல் பலி.. முதியவர் இறப்பால் பரபரப்புகொரோனா வைரஸ்.. அமெரிக்காவில் முதல் பலி.. முதியவர் இறப்பால் பரபரப்பு

ஆனாலும் அடங்காத பாஜகவினரின் ரத்த வெறியாம் கோலி மரோ கோஷம் இன்னமும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இன்று கொல்கத்தாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்ற சி.ஏ.ஏ. ஆதரவு பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்க வருகை தந்த பாஜகவினர் வழக்கம் போல வழியெங்கும் கோலி மரோ என்ற வெறியாட்ட கோஷத்தை எழுப்பியபடி வந்தனர்.

டெல்லியில் 35 பேரை பலி கொண்ட இந்த கோலி மரோ கோஷத்துக்கு இன்னமும் எத்தனை எத்தனை உயிர்கள்தான் தேவை எனவும் தெரியவில்லை!

English summary
Bharatiya Janata Party workers raised the Goli maro...shoot the traitors slogan on their way to Amit Shah's Rally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X