கன்யா குமாருக்கு எதிரான சர்ச்சை பேச்சு: பாஜக நிர்வாகி கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கம்!
டெல்லி: ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையாகுமாரின் நாக்கை வெட்டினால் ரூ.5 லட்சம்; அவரை சுட்டுக் கொன்றால் ரூ.11 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்து சர்ச்சையை ஏற்படுத்திய உத்தரப்பிரதேச பாஜக நிர்வாகி குல்தீப் வார்ஷினி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டார்.
டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யூ) கடந்த மாதம் 9-ந்தேதி இந்தியாவுக்கு எதிராக மாணவர்கள் சிலர் கோஷம் எழுப்பியதாகவும், இதுதொடர்பாக பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்னையா குமார் 12-ந்தேதி தேசவிரோத வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் கன்னையா குமார் 6 மாத இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவர் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன், பாஜகவுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் கருத்துகளைத் தெரிவித்தார்.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம், படாவன் மாவட்டத்தின் பாஜக யுவ மோர்ச்சா தலைவரான குல்தீப் வார்ஷினி,கன்னையாவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அவரது நாக்கை வெட்டுபவர்களுக்கு நான் 5 லட்ச ரூபாய் தருகிறேன் எனக் கூறியிருந்தார். பாஜக பிரமுகரின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து வெறுப்பூட்டும் வகையில் பேசிய குல்தீப்பை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி, படாவன் மாவட்ட பாஜக தலைவர் ஹரீஷ் சாக்யா சனிக்கிழமை உத்தரவு பிறப்பித்தார்.
இதுகுறித்து சாக்யா கூறுகையில், குல்தீப்பின் கருத்து அவரது தனிப்பட்டதாகும். இதில் பாஜகவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை.கட்சி அலுவலகத்துடன் கலந்தாலோசிக்காமல் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த அவர் கட்சியிலிருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்படுகிறார்' என்றார் ஹரீஷ் சாக்யா.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications