Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துப்பாக்கி சுடல பார்த்திபன்.. எடுபடாமல் போன பாஜகவின் ‘நயா காஷ்மீர்’ கோஷம்! Exit polls சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் வரும் 8 ஆம் தேதி வெளியாகின்றன. நேற்று மாலை, எக்சிட் போல் முடிவுகளை பல்வேறு ஊடகங்கள் வெளியிட்ட நிலையில், பாஜக எதிர்பார்த்த எண்ணிக்கை வரவில்லை. பாஜகவின் 'நயா காஷ்மீர்' முழக்கம் மக்களிடையே எடுபடவில்லை என்பதையே எக்சிட் போல் முடிவுகள் வெளிப்படுத்தி உள்ளன.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் 90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீரில், காங்கிரஸ் கூட்டணி 38 முதல் 45 இடங்களை கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக 25 முதல் 32 இடங்களை கைப்பற்ற வாய்ப்பிருப்பதாகவும், மெகபூபா முஃப்தியின் கட்சி 5 -9 இடங்களையும் மற்ற கட்சிகள் 8 முதல் 14 இடங்கள் வரை வெற்றி பெறக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

exit polls 2024 jammu kashmir election exit polls jammu kashmir assembly elections 2024 2024

ஆக, ஜம்மு காஷ்மீரில், பாஜக ஆட்சி அமைப்பது சிக்கல் என்றே தெரிகிறது. காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி ஆட்சி அமையக்கூடும், அல்லது தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளது. மெகபூபா முஃப்தி, ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பார் என்று தெரிகிறது. பாஜக, 30 தொகுதிகளுக்குள் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக எக்ஸிட் போல் முடிவுகள் கூறுகின்றன.

சட்டப்பிரிவு 370 ரத்துக்குப் பிறகு அமைதி, வளர்ச்சி, செழிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, "நயா காஷ்மீர்" அதாவது புதிய காஷ்மீர் ஆக மாற்றியமைக்கப்படும் என மத்திய பாஜக அரசு கூறி வந்த நிலையில், இந்த கோஷம் அக்கட்சிக்கு வாக்குகளாக மாறவில்லை என்பது எக்சிட் போல் கணிப்புகளின் மூலம் தெரியவருகிறது.

சையத் அல்தாப் புகாரியின் அப்னி கட்சி, சஜ்ஜத் லோனின் மக்கள் மாநாடு கட்சி போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தனது இருப்பை விரிவுபடுத்தவும், காஷ்மீரில் கட்சியை வலுப்படுத்தவும் கடுமையாக உழைத்த பாஜகவுக்கு இந்த தேர்தல் ஆதாயமாக மாறவில்லை என்பதையே தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் உணர்த்துகின்றன.

சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் முதல் முறையாக சட்டசபை தேர்தல் நடந்த நிலையில், முதல் முறையிலேயே ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற பாஜகவின் லட்சியம் இந்த முறை நிறைவேறாது என்றே எக்சிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த மக்களவைத் தேர்தலின் போது பள்ளத்தாக்கில் உள்ள மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளில் எதிலும் பாஜக போட்டியிடவில்லை. 370வது சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் பாஜக பள்ளத்தாக்கு பகுதியின் 3 தொகுதிகளிலும் போட்டியிடாததே, காஷ்மீரில் பாஜக தனது தோல்வியை ஒப்புக்கொள்வதாக கருதப்பட்டது.

மத்திய பாஜக அரசு ஆகஸ்ட் 2019 இல் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து, ​​​​சிறப்பு அந்தஸ்தை நீக்கி, யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தபோது, ​​​​அப்பகுதி கடும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது. நிலைமை சீரடையத் தொடங்கியவுடன், நரேந்திர மோடி அரசு, வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பு போன்ற வாக்குறுதிகளுடன் 'நயா காஷ்மீர்' முழக்கத்தை முன்வைத்தது.

இதற்கிடையில், தேசிய மாநாடு மற்றும் மெஹபூபா முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி போன்ற பிராந்தியக் கட்சிகள் இந்த நடவடிக்கையை காஷ்மீருக்கு எதிரானது என்றும், பாஜகவை காஷ்மீருக்கு எதிரானது என்றும் சித்தரித்தன. இது ஓரளவுக்கு அவர்களுக்கு வெற்றி கொடுத்துள்ளது.

பாஜகவின் 'நயா காஷ்மீர்' கோஷத்தில் பயங்கரவாதம், பிரிவினைவாதம் ஆகியவற்றுக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகள் வரவேற்கப்பட்டாலும், சுதந்திரமான பேச்சுரிமை நசுக்கப்படுவதாக பலரும் கருதினர். அதிருப்தியைக் கட்டுப்படுத்த அச்சம் பயன்படுத்தப்படுகிறது என்ற பரவலான கருத்து மக்கள் மத்தியில் இருந்தது.

காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்ட பிறகு, பெரிய அளவிலான முதலீடுகள் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவது உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவோம் என்று பாஜக வாக்குறுதி அளித்தது. ஆனால் இந்த முக்கியமான பிரச்சினைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாதது மக்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுவே இந்த தேர்தலில் எதிரொலித்து, பாஜகவை எழ விடாமல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

எக்ஸிட் போல் முடிவுகள்: ஆக்சிஸ் - மை இந்தியா நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 24 - 34, காங்கிரஸ் - தேசிய மாநாடு கூட்டணிக்கு 35 - 45 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இண்டியா டுடே - சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 27-32, காங்கிரஸ் - தேசிய மாநாடு கூட்டணிக்கு 40-48 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டைனிக் பாஸ்கர் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 20-25, காங்கிரஸ் கூட்டணிக்கு 35-40, மக்கள் ஜனநாயக கட்சிக்கு 4-7, இதர கட்சிகளுக்கு 12-18 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டு உள்ளது.

பீப்பிள்ஸ் பல்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவுக்கு 23-27 இடங்கள், காங்கிரஸ் - தேசிய மாநாடு கூட்டணிக்கு 46-50 இடங்கள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+