கருப்பு பண விவகாரம்: பெயர் பட்டியலில் உள்ள 289 பேரின் கணக்கில் பணமே இல்லையாம்!
டெல்லி: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கருப்பு பணம் வைத்திருப்போர் பட்டியலில் உள்ள 289 பேரின் கணக்கில் பணமே இல்லை என்ற விவரம் தெரிய வந்துள்ளது.
இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் சிறப்பு புலனாய்வு குழு திணறி வருகிறது.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் சிலர் பதுக்கி வைத்துள்ள பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கருப்பு பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விசாரணையை மேற்பார்வையிட ஓய்வு பெற்ற நீதிபதிகள் எம்.பி.ஷா, அரிஜித் பசாயத் ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை மத்திய அரசு அமைத்தது. அக்குழு, சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்புடன் செயல்பட்டு வருகிறது.
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியில் கருப்பு பணம் வைத்துள்ள 600-க்கும் மேற்பட்ட இந்தியர்களின் பெயர் அடங்கிய பட்டியல், பிரான்ஸ் நாடு மூலமாக இந்தியாவுக்கு ஏற்கனவே கிடைத்தது. அந்த பட்டியலை உச்சநீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழு சமர்ப்பித்துள்ளது.
இந்நிலையில், அந்த பட்டியலை ஆய்வு செய்தபோது, பட்டியலில், 289 பேரின் வங்கி கணக்கில் பணமே இல்லை என்று சிறப்பு புலனாய்வு குழு கண்டுபிடித்துள்ளது. அதிலும், அவர்களில் 122 பேரின் பெயர்கள், அதே பட்டியலில் இரண்டாைவது முறையாக இடம்பெற்றுள்ளன. ஞ
மேலும், இந்த கணக்குகளை இயக்கியது தொடர்பாக எந்த விவரங்களும் இல்லை. அந்த கணக்குகள் எப்போது தொடங்கப்பட்டது, எப்போதெல்லாம் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டது என்பன போன்ற விவரங்களும் இல்லை.
கறுப்புப் பண விவகாரம் குறித்து பல ஆண்டுகளாக பேசிக் கொண்டிருந்த அரசு மிக மிகத் தாமதமாக நடவடிக்கையில் இறங்கியதால், அதற்குள் விழித்துக் கொண்டு கணக்குகளை காலி செய்துவிட்டனர் கறுப்புப் பண முதலைகள்.
இப்போதைய நிலவரப்படி 300 பேர் மீது மட்டும்தான் இந்த சிறப்புக் குழுவால் நடவடிக்கை எடுக்க முடியும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications