வெளிநாட்டில் கருப்பு பணத்தை பதுக்கியிருப்பவர்களுக்காக சலுகை திட்டத்தை அறிமுகப்படுத்தும் மத்திய அரசு
டெல்லி: வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து ஒப்புக் கொண்டால் குறைந்தபட்ச அபராதத்துடன் தப்பிக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியரகள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்களுக்காக ஒரு சலுகை திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

அந்த திட்டம் இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதம் அறிமுகப்படுத்தக்கூடும் என்றும், இரண்டு மாதங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்றும் கூறப்படுகிறது. அந்த திட்டத்தின்படி தானாக முன்வந்து வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை சம்பந்தப்பட்டவர்கள் வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்புக் கொண்டால் அவர்கள் 30 சதவீத வரி மற்றும் 30 சதவீத அபராதம் செலுத்திவிட்டு பிரச்சனையில் இருந்து வெளியே வரலாம்.
சலுகை திட்டத்தை பயன்படுத்தாமல் வரித் துறை அதிகாரிகள் கருப்பு பணத்தை பதுக்கி இருப்பவர்களை கண்டுபிடித்தால் அவர்கள் 30 சதவீத வரி, 90 சதவீத அபராதம் மற்றும் கிரிமினல் வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
இது குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி லோக்சபாவில் கூறுகையில்,
கருப்பு பணத்தை பதுக்கியிருப்பவர்கள் தானாக முன்வந்து அதை ஒப்புக் கொண்டால் 30 சதவீத வரி மற்றும் 30 சதவீத அபராதத்துடன் தூய்மையானவர்களாக வெளியேறும் சலுகை திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications