கருப்பு பணம்: ஜேத்மலானியுடன் சேர்ந்து மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் சு.சாமி
டெல்லி: வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்கும் விவகாரத்தில் உதவி செய்ய முன்வந்துள்ள பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமியின் கோரிக்கை குறித்து பதில் அளிக்க சிறப்பு விசாரணை குழுவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

கருப்பு பணத்தை மீட்பது குறித்து லோக்சபாவில் கொண்டு வரப்பட்ட மசோதா வலுவானதாக இல்லை. அதை வைத்து வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்க முடியாது. கருப்பு பணத்தை மீட்பது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விசாரணை குழுவுக்கு உதவி செய்ய எனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர்கள் சாமியின் கோரிக்கை குறித்து பதில் அளிக்குமாறு சிறப்பு விசாரணை குழுவுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி தொடர்ந்த பொதுநல வழக்கின்பேரில் தான் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் கருப்பு பணத்திற்கு எதிரான தனது போராட்டத்தில் சாமியும் சேர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ராம்ஜெத்மலானி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
கருப்பு பண விவகாரம் குறித்து சாமி அளிக்கும் ஆதரவு மற்றும் தகவல் ஆகியவற்றை வரவேற்கிறேன். என் வயதான காலத்தில் கருப்பு பணத்திற்கு எதிரான போராட்டத்தில் கூட்டாளியை எதிர்பார்த்த நேரத்தில் சாமி வந்துள்ளார் என்றார்.
கருப்பு பணத்தை பதுக்கியுள்ளவர்கள் மீது எப்.ஐ.ஆர். போடுவது, மும்பையில் உள்ள சுவிஸ் வங்கி கிளை அதிகாரிகளை கைது செய்து கருப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் பெயரை அளிக்குமாறு வலியுறுத்துவது உள்பட நான்கு முறைகளை சாமி பரிந்துரைத்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications