சூப்பரப்பு.. வரி ஏய்ப்பாளர்களிடமிருந்து அரசுக்கு கிடைத்தது ரூ.30,000 கோடி.. அருண் ஜேட்லி பேட்டி
டெல்லி: மத்திய அரசின் வரி ஏய்ப்பு தடுப்பு திட்டத்தால் ரூ. 65,250 கோடி மதிப்புள்ள கணக்கில் காட்டப்படாத கருப்பு பணம் குறித்த தகவல் கிடைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி டெல்லியில் இன்று தெரிவித்தார்.
வரி ஏய்ப்பு செய்தோர் தண்டனையிலிருந்து தப்பிக்க அரசு கொடுத்த 4 மாத வாய்ப்பு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இதுவரை வந்துள்ள கருப்பு பணம் குறித்த தகவலை இன்று அவர் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டபோது இவ்வாறு தெரிவித்தார்.

அதிகாரிகள் இன்னமும் வந்துள்ள ஆவணங்களை பரிசீலனை செய்து கொண்டிருப்பதால், இந்த பணத்தின் மதிப்பு இன்னும் உயர வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜூன் 1ம் தேதி அரசு அறிவித்த வரி ஏய்ப்பு தவிர்ப்பு திட்டத்தின்படி, வரி ஏய்ப்பு செய்தவர்களுக்கு செப்டம்பர் 29ம் தேதிவரை தங்களை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவ்வாறு உண்மையை தெரிவிப்போருக்கு தண்டனையோ, அபராதமோ, செஸ் விதிப்போ கிடையாது என அறிவிக்கப்பட்டது.
எனவே இந்த சலுகைகள் போக அரசுக்கு கிடைக்கப்போகும் வரி வருமானம், ரூ.30 ஆயிரம் கோடி. மூன்று தவணைகளில் வரி ஏய்ப்பாளர்கள் இந்த தொகையை அரசுக்கு செலுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு நவம்பர் இறுதிக்குள் முதல் தவணை முடிவடையும். 25 சதவீத தொகையை அப்போது செலுத்தலாம். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் 2வது தவணையாக மேலும் 25 சதவீத வரியை செலுத்த வேண்டும். பாக்கி தொகையை அடுத்த வருடம் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
வரி ஏய்ப்பாளர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், செப்டம்பர் மாதத்திற்கு பிறகு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிறை தண்டனை விதிக்குமளவுக்கு அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் பிரதமர் மோடி எச்சரித்திருந்தார். இதைத்தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மூலம் வரி ஏய்ப்பாளர்களுக்கு அரசு நெருக்கடி கொடுத்து இவ்வளவு தொகையை, அரசின் கருவூலத்திற்கு கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications