ம.பி.யில் பயங்கரம்... ப்ளூவேல் விளையாட்டால் ரயில் முன்பாய்ந்து மாணவன் தற்கொலை
ம.பி.யில் பயங்கரம்... ப்ளூவேல் விளையாட்டால் ரயில் முன்பாய்ந்து மாணவன் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
போபால்: மத்திய பிரதேசத்தில் உயிரைக் கொல்லும் ப்ளூவேல் விளையாட்டால் ரயில் முன்பாந்து மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் டாமோ மாவட்டத்தில் பிளஸ் ஒன் படித்து வந்த மாணவர் சாத்விக் பாண்டே. இவரை சனிக்கிழமை மாலை முதல் காணவில்லை என பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து மாணவரை போலீசார் தேடி வந்தனர். அப்போது ரயில்வே டிராக்கில் மாணவர் ஒருவர் அடிபட்டு இறந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ரயிலில் அடிபட்டு இறந்தது சாத்விக் பாண்டே என உறுதி செய்யப்பட்டது. ப்ளூவேல் விளையாட்டால் சாத்விக் பாண்டே ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
மத்திய பிரதேச மாநிலத்தில் ப்ளூவேல் விளையாட்டால் நிகழ்ந்த முதல் மரணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications