தானே அருகே படகில் ஓட்டை: உயிர் பிழைக்க நீரில் குதித்த தந்தை, மகன் பலி
மும்பை: தானே அருகே படகில் ஓட்டை விழுந்ததையடுத்து நீரில் குதித்த தந்தை, மகன் பரிதாபமாக பலியாகினர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள உல்லாஸ் நகரைச் சேர்ந்த 2 குடும்பத்தினர் டிட்வாலாவில் உள்ள கோவில் ஒன்றுக்கு சென்றனர். அவர்கள் கோவில் அருகே உள்ள குளத்தில் படகு சவாரி செய்தனர்.
அப்போது அவர்கள் சென்ற படகில் ஓட்டை விழுந்து நீர் புகுந்தது. இது குறித்து படகு கழக மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் மீட்பு குழு வருவதற்குள் படகில் இருந்த 7 பேரும் நீரில் குதித்துவிட்டனர். நீரில் குதித்தவர்களில் 5 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர். ஆனால் மேத்ரேஜாஸ்(42) மற்றும் அவரது மகன் அஜய்(12) ஆகியோரை மீட்பு குழுவினரால் உடனே கண்டுபிடிக்க முடியவில்லை.
சுமார் 2 மணிநேரம் தேடிய பிறகு தந்தை, மகனின் சடலங்கள் தான் கிடைத்தது. இந்த சம்பவம் குறித்து டிட்வாலா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றியும், பராமரிக்கப்படாத படகில் பயணிகளை சவாரிக்கு அழைத்துச் சென்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து படகு கழக தலைவர் சகாரா சான்ஸ்தா மற்றும் அதன் இயக்குனர் நரேந்திர ஜாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications