ஓடும் ரயிலில் டாய்லெட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்த வாலிபர்!
லக்னோ: ஓடும் ரயிலில் டாய்லெட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் ஒருவரின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா தலைநகர் சண்டிகரில் இருந்து குஜராத் தலைநகரான அகமதாபாத் வரை செல்லும் உன்ச்சஹார் எக்ஸ்பிரஸ் ரயில் உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் நகரை நேற்றிரவு நெருங்கியது. அப்போது அதில் பயணித்த பெண் ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார்.

கழிவறையின் கதவு உள்புறம் தாழிடப்படிருந்ததையடுத்து, வெகுநேரம் வெளியில் காத்திருந்த அந்தப் பெண், நீண்டநேரமாகியும் கதவு திறக்கப்படாததால் பொறுமை இழந்து கதவை தட்டியுள்ளார்.
ஆனால் உள்ளே இருந்து பதில் வராததால், அதிர்ச்சி அடைந்த அப்பெண் இது தொடர்பாக ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து திறந்துள்ளனர். அப்போது, உள்ளே ஒரு துண்டு துணியில் தூக்கு மாட்டியபடி இளைஞர் ஒருவர் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
சடலத்தை இறக்கி பரிசோதித்தபோது சட்டைப்பையில் இருந்த குறிப்புகளைப் பார்த்தபோது, இறந்தவரின் பெயர் ஷியாம் லால் (30) என்பதும் பீகார் மாநிலத்தின் சம்ப்ரான் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
அந்த முகவரியின் அடிப்படையில் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த ரெயில்வே போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications