ரூ.250 கோடி கேட்டு நடிகர் சல்மான்கான் மீது பட அதிபர் வழக்கு..
மும்பை : சல்மான் கான் நடித்த "வீர்" திரைப்படம் பெரும் நஷ்டத்தை சந்தித்த நிலையில், தனக்கு எதிராக அவதூறு பரப்புவதாக கூறி, 250 கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என அத்திரைப்படத்தை தயாரித்த பட அதிபர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு நடிகர் சல்மான்கான் நடித்த வீர் என்ற படத்தை விஜய்கலானி தயாரித்தார். அண்மையில் இப்படம் ரிலீசானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்கள் ஆதரவு இல்லாததால், வசூலில் படுத்துக்கொண்டது.

இதையடுத்து சல்மான்கானுக்கும், விஜய் கலானிக்கும் இடையே மோதல் மூண்டுள்ளது. உறுதியளித்தபடி சம்பளம் தரவில்லை என்று சல்மான்கான் குற்றம் சாட்டியுள்ளார். நடிகர் சங்கத்திலும் அவர் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து சல்மான்கானிடம் 250 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு தொடரப்போவதாக விஜய் கலானி வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து விஜய் கலானி கூறியதாவது...
வீர் படத்தை தயாரிக்குமாறு சல்மான்கான் என்னிடம் தெரிவித்தார். நானும் சம்மதித்தேன். அதற்கு சம்பளமாக அவருக்கு ரூ.10 கோடி கொடுக்கப்பட்டது.
படம் நன்றாக ஓடினால் மேலும் ரூ.15 கோடி தருவதாக ஒப்பந்தம் போட்டேன். ஆனால் படம் சரியாக ஓடவில்லை. பெரும் நஷ்டமடைந்து விட்டது. ஆனாலும் என் மீது அவதூறாக கருத்துக்களை சல்மான்கான் வெளியிட்டுள்ளார். 15 கோடி ரூபாய் கேட்டு மிரட்டவும் செய்கிறார்.
இதனால் என் மனம் புண்பட்டு உள்ளது. எனவே எனது புகழைக் கெடுத்ததற்காக 200 கோடி ரூபாயும், நிதியிழப்பு ஏற்படுத்தியதற்காக 50 கோடி ரூபாயும் என 250 கோடி ரூபாய் கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்கிறேன்.
இவ்வாறு பட அதிபர் விஜய் கலானி கூறினார்.
ஏற்கனவே மான் வேட்டை வழக்கு, போதையில் கார் ஏற்றி கொன்ற வழக்கு ஆகியவற்றில் சிக்கித் தவித்து வரும் சல்மான் கானுக்கு தற்போது பட அதிபர் மூலம் மற்றுமொரு சிக்கல் வந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications