டெல்லி: காத்மாண்டுவுக்கு கிளம்ப இருந்த 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லி: டெல்லி விமான நிலையத்தில் இருந்து காத்மாண்டுவுக்கு கிளம்பவிருந்த 2 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள இந்திராகாந்தி விமான நிலையத்தில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானம் மற்றும் ஏர் இந்தியா விமானம் ஆகியவை காத்மாண்டுவுக்கு கிளம்பவிருந்தன. பயணிகள் விமானங்களில் ஏறி தங்களின் இருக்கைகளில் அமர்ந்துவிட்டனர்.

இந்நிலையில் விமான நிலையத்தில் உள்ள டிசிபி அலுவலகத்திற்கு ஒருவர் போன் செய்து காத்மாண்டுவுக்கு செல்லும் ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர் இந்தியா விமானங்களில் வெடிகுண்டு உள்ளது என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதையடுத்து ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் இருந்த 122 பயணிகள் மற்றும் 7 சிப்பந்திகள் கீழே இறக்கிவிடப்பட்டு விமானம் தனியாக ஒரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதே போன்று ஏர் இந்தியா விமானத்தில் இருந்த பயணிகளும் கீழே இறக்கிவிடப்பட்டு விமானம் தனியாக ஒரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
விமாங்களை வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். முன்னதாக நேற்று டெல்லியில் இருந்து காத்மாண்டுவுக்கு கிளம்பவிருந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அது தாமதாக கிளம்பியது.
இன்று போன் செய்தவர் இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த ஹபீஸ் ஆசாத் என்று தெரிய வந்துள்ளது. 2 விமானங்களிலும் லேப்டாப்புகளில் குண்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications