மே.வங்கம்: பாஜக எம்.பி. வீடு மீது நாட்டு வெடிகுண்டுகள் சரமாரி வீச்சு-துப்பாக்கிச் சூடு
பார்ரக்பூர்: மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி எம்.பி. அர்ஜூன் சிங் வீடு மீது மர்ம நபர்கள் சரமாரியாக நாட்டு வெடிகுண்டுகள் வீசியுள்ளனர். மேலும் அவர் வீடு மீது துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் பார்ரக்பூரின் மஸ்தூர் பவனில் அர்ஜூன் சிங் வீடு உள்ளது. இங்கு நேற்று இரவு 9 மணியளவில் மர்ம கும்பல் ஒன்று நாட்டு வெடிகுண்டுகளை அடுத்தடுத்து வீசியது. பின்னர் வீட்டை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தியது.

இச்சம்பவம் தொடர்பாக அர்ஜூன் சிங் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து அவர் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவி எம்.பியானவர் அர்ஜூன்சிங்.
இதனால் இத்தாக்குதலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு தொடர்பிருக்கலாம் என கூறப்படுகிறது. அதேநேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வன்முறையில் ஈடுபடுவதை நிறுத்த அக்கட்சித் தலைவரும் முதல்வருமான மமதா பானர்ஜி உத்தரவிட்டிருந்தார்.
கடந்த ஜூன் மாதம் இதே வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் பத்பாரா என்ற பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவினரிடையேயான மோதல் நடைபெற்றது. இதில் 2 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
எம்பினு கூட பார்க்கலையே.. மம்தா மருமகன் அபிஷேக் பானர்ஜியை ஓடஓட விரட்டி தாக்கிய மக்கள்.. ஷாக் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications