ஜம்முவில் மீட்கப்பட்ட 3 பசுக்களின் சடலங்களுக்கு பிரேத பரிசோதனை... பலி தரப்படவில்லை என போலீஸ் தகவல்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 3 பசுக்களின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அந்த பசுக்கள் பலி கொடுக்கப்படவில்லை, விஷ உணவால் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் மாட்டிறைச்சி விற்பனைக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்து நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். அதனால் மாட்டிறைச்சி விற்பனைக்கான தடை உத்தரவை 2 மாத காலம் நிறுத்தி வைக்க வேண்டும். மேலும் 3 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இது தொடர்பான வழக்கை விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால், இந்த மாட்டிறைச்சி விவகாரத்தை முன்வைத்து வீண் வதந்திகள் கிளம்பி பதட்டத்தை ஏற்படுத்தி வந்தன. ஏற்கனவே, உத்திரப்பிரதேச மாநிலத்தில் பசுவை பலியிட்டதாக இக்லாக் என்ற முதியவரும், அவரது மகனும் கும்பலால் தாக்குதலுக்கு ஆளானார்கள். இதில், இக்லாக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் செனானி தாலுகாவில் 3 பசுக்களின் சடலங்கள் மீட்கப்பட்டது. அவை பலி கொடுக்கப்பட்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து வீண் வதந்திகளால் வன்முறை சம்பவங்கள் நிகழாத வகையில் ஜம்மு காஷ்மீர் முழுவதும் உடனடியாக இணையசேவைகள் முடக்கப்பட்டன. வன்முறை சம்பவங்கள் நிகழவில்லை என உறுதியாகும் வரை இணைய சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என அம்மாநில போலீசார் அறிவித்தனர்.
தகவல் அறிந்து விரைந்து சென்று பசுக்களின் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், கால்நடை மருத்துவர்கள் கொண்டு அதற்கு பிரேத பரிசோதனை நடத்தினர். அதில், அந்த 3 பசுக்களும் விஷ உணவைச் சாப்பிட்டு உயிரிழந்ததாகவும், அவை பலி கொடுக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவ்விவகாரம் தொடர்பாக உதாம்பூர் எஸ்எஸ்பி முகமது சுலைமான் சவுத்ரி கூறுகையில், "உதாம்பூர் மாவட்டம் செனானி தாலுகாவில் சப்-டிவிஷ்னல் மாஜிஸ்திரேட் அலுவலகத்திற்கு பின்புறமாக படுகொலை செய்யப்பட்ட 3 பசுக்களில் சடலங்கள் மீட்கப்பட்டது. ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில் அவை பலி கொடுக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது. அவற்றின் கழுத்தில் கூர் ஆயுதங்களால் தாக்கிய தடயம் எதுவும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், விஷ உணவு சாப்பிட்டதாலேயே பசுக்கள் உயிரிழந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவிக்கின்றது. பசுக்களின் உடல்கள் மீட்கப்பட்ட பகுதியில் சில காகங்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது. எனவே, அவை அனைத்தும் விஷ உணவு எதையாவது சாப்பிட்டிருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது.
எனவே, மக்கள் அமைதி காக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.
ஜம்மு காஷ்மீரில் மாட்டிறைச்சி விருந்து நடத்தியதற்காக சுயேட்சை எம்.எல்.ஏ.வை பாரதீய ஜனதா எம்.எல்.ஏக்கள் சட்டபேரவைக்குள்ளையே தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த 3 பசுக்களின் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவம் வெளியானதால் அங்கு பெரும் பதட்டமான சூழல் உருவானது குறிப்பிடத்தக்கது.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
ஐஎஸ்ஐ தீவிரவாதிகளின் புது சதி.. இந்திய அரசியலுக்குள் ஊடுருவ திட்டம்.. அதிர வைக்கும் பயங்கர பிளான்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications