கேமராவை உடைத்ததாக 10ம் வகுப்பு மாணவனை அடித்த 4 ஆசிரியர்கள் - அவமானத்தில் மாணவர் தற்கொலை
அகமதாபாத்: குஜராத்தில் ஆசிரியர்கள் அடித்ததால் மனமுடைந்த 10ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத், பானாஸ்கந்தா மாவட்டம் அருகேயுள்ள தாரட் தாலுக்காவில் காயத்ரி வித்யாலயா என்ற பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தான் பிரகாஷ் என்ற 16வயது மாணவன். சம்பவத்தன்று பள்ளியில் உள்ள கேமராவை சேதப்படுத்தியதாக, பிரகாஷை 4 ஆசிரியர்கள் சேர்ந்து அடித்ததாக கூறுப்படுகிறது.
இதனால், அவமானம் அடைந்த பிரகாஷ், அம்பேத்கர் நகரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்ந்த பானாஸ்கந்தா போலீசார், பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி வளாகத்திற்குள் அடைத்து வைத்து ஆசிரியர்கள் சங்கராம் படேல், ஜி.கே.படேல், பி.எம்.படேல் மற்றும் பதிஜி தாக்கூர் ஆகியோர் கடுமையாக அடித்ததாக டிஎஸ்பி எஸ்.ஜி.படேல் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications