மாயாவதி - காங்கிரஸ் இடையே தொடரும் குழப்பம்.. மத்திய பிரதேச கூட்டணி உறவில் விரிசல்!
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியுடன் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி தனியாக 22 வேட்பாளர்களின் பெயரை அறிவித்து உள்ளது.
டெல்லி: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியுடன் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி தனியாக 22 வேட்பாளர்களின் பெயரை அறிவித்து உள்ளது. அதேபோல் சட்டிஸ்கர் மாநிலத்திலும் இந்த கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்திற்கும், சட்டிஸ்கருக்கும் விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் ஆட்சி காலமும் இந்த வருட இறுதியில் முடிவடையும். சட்டிஸ்கரில் தற்போது பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
சட்டிஸ்கரில் அடுத்த ஜனவரியுடன் அங்கு ஆட்சி காலம் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் சட்டிஸ்கர் சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து ஆட்சி அமைத்து நிலையாக இருக்கும் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சியையும் இந்த வருட இறுதியில் முடிகிறது.

சட்டிஸ்கர் கூட்டணி
சட்டிஸ்கர் மாநிலத்தில் பாஜக ஆட்சியை வீழ்த்த காங்கிரஸ் கட்சியுடன் மாயாவதி கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது மாயாவதி ஒரு காலத்தில் தனக்கு எதிராக இருந்த அஜித் ஜோகியின் சட்டிஸ்கர் ஜனதா காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து இருக்கிறார். காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை செய்யாமல் காலம் தாழ்த்திய காரணத்தால் அவர் இந்த முடிவிற்கு வந்துள்ளார்.

மத்திய பிரதேசம்
மத்திய பிரதேசத்தில் கடந்த 15 வருடங்களாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. இதை அகற்ற காங்கிரஸ் மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி இணையும் என்று கூறப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது. மத்திய பிரதேசத்தில் உள்ள 230 இடங்களில் எத்தனை இடங்களில் பிரித்துக் கொள்வது என்று விவாதம் நடந்து வந்தது. ஆனால் எந்த விதமான பேச்சு வார்த்தையிலும் உடன்படிக்கை எட்டவில்லை.

பிரச்சனை ஆனது
இந்த நிலையில்தான், பகுஜன் சமாஜ் கட்சி காங்கிரஸ் கட்சியை சீண்டும் விதமாக அவ்வப்போது சில வேட்பாளர்களை மட்டும் அறிவித்து வந்தது. ஆனால் தற்போது மொத்தமாக 22 பேரை வேட்பாளராக பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்து இருக்கிறது. பகுஜன் சமாஜ் 50 தொகுதிகளை கேட்டு காங்கிரஸ் கொடுக்காத காரணத்தால் இப்படி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பாஜக
இதனால் மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக பெரிய பலனை அடைய வாய்ப்பு உள்ளது. அங்கு பட்டியலின வகுப்பு மக்களின் வாக்குகள் இதனால் மாயாவதிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பாதிக்கு பாதியாக பிரியும். அதேபோல் மற்ற மைனாரிட்டி வாக்குகளும் பிரியும். இதன் பலனை பாஜக கட்சி அப்படியே அனுபவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications