திருமணத்தில் விருப்பமில்லை- விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட மணமகள்!
ஸ்ரீகாளஹஸ்தி: ஆந்திராவில் மணப்பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த ஒந்தலவாரிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பத்ரா, விவசாயி. இவருடைய மகள் வசந்தா. இவர் எம்.பி.ஏ படித்து விட்டு பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு நிம்மனப்பள்ளி மண்டலம் கத்தரவாரிபள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜம்மாள் என்பவரின் மகன் வெங்கடேஷ்வருடன், வசந்தாவுக்கு திருமண நிச்சயத்தார்த்தம் செய்யப்பட்டு, நாளை நிம்மனப்பள்ளியில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது.
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த வசந்தா பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு மயக்கமடைந்து கிடந்தார். அவரை, குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதனப்பள்ளிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று வசந்தா பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து நிம்மனப்பள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், வசந்தாவுக்கு வெங்கடேஷ்வருடன் நடக்க இருந்த திருமணத்தில் விரும்பம் இல்லை என்றும், இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications