4 மணி நேரத்தில் கல்யாணம்.. மேக்-அப்பில் இருந்த மணப் பெண்ணின் கழுத்தை அறுத்து கொன்ற இளைஞர்.. ஷாக்!
மணப்பெண்ணை கழுத்து அறுத்து கொன்ற காதலனை போலீசார் தேடி வருகின்றனர்
போபால்: இன்னும் 4 மணி நேரத்தில் கல்யாணம்.. பியூட்டி பார்லரில் மேக்அப் செய்து கொண்டிருந்த மணப்பெண்ணை, அவரது காதலன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் ஷாஜாபூர்ரில் வசித்து வந்தவர் சோனு.. இவருக்கும் ஜோரா நகரை சேர்ந்த இளைஞருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணத்துக்கு நாள் குறித்திருந்தனர்.. அதனால் அன்றைய தினம் காலை, தனது குடும்பத்தினருடன் ஜோரா நகரத்திற்கு வந்துள்ளனர் பெண் வீட்டினர்.

4 மணி நேரத்தில் திருமணம் உள்ள நிலையில், உறவுக்கார பெண் ஒருவரை அழைத்து கொண்டு, பியூட்டி பார்லருக்கு சென்றார் சோனு.. அந்த நேரத்தில் சோனுவின் முன்னாள் காதலர் ராம் யாதவ் போன் செய்தார்.. ஆனால் அதை பார்த்தும் சோனு போன் எடுக்கவில்லை.
உடனே ராம் யாதவ், தன்னுடைய நண்பரின் செல்போனில் இருந்து சோனுவை அழைத்தார்.. புது நம்பர் என்பதால் சோனு அந்த போனை எடுத்து பேசினார். "எங்கே இருக்கே" என்று சோனுவை காதலன் கேட்டுள்ளார்.. தான் பியூட்டி பார்லரில் இருப்பதாக சோனு சொல்லவும், கொஞ்ச நேரத்தில் நண்பனுடன் அந்த பார்லருக்கு வந்தார் காதலன்.
திடுதிப்பென்று உள்ளே நுழைந்து அலங்காரம் செய்து கொண்டிருந்த சோனுவின் தொண்டையை அறுத்துவிட்டு தப்பி ஓடினார்.. ரத்த வெள்ளத்தில் சோனு அங்கேயே சடலமாக விழுந்து இறந்தார். தகவலறிந்த போலீசார் கொலை குறித்து வழக்கு பதிவு செய்து, இதற்கு உடந்தையாக இருந்த நண்பரை கைது செய்துள்ளனர்.
ஆனால் ராம் யாதவ் எங்கே என்றே தெரியவில்லை.. அவரை தேடி வருகிறார்கள்.. இந்த சம்பவம் போபாலில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
Rooster பொஷிஷனில் மனைவிக்கு ‘டார்ச்சர்'.. வீட்டுக்குள் சிறை வைத்து கணவர் செய்த வெறிச்செயல் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications