For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீமாந்திரா பகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

By Veera Kumar
Google Oneindia Tamil News

திருப்பதி: சீமாந்திரா பகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்துவருகிறது.

ஆந்திர மாநிலம் தெலுங்கானா, சீமாந்திரா என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. மாநில பிரிவினை வரும் ஜூன் 2ம்தேதி முதல்தான் அமலுக்கு வரும் என்றாலும், இப்போதே, சீமாந்திரா, தெலுங்கானா பகுதிகளில் தனித்தனியாக வாக்குப்பதிவு நடந்துவருகிறது.

திருப்பதி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய சீமாந்திரா பகுதியில் 175 சட்டசபை தொகுதிகளும், 25 நாடாளுமன்ற தொகுதிகளும் உள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் 333 பேரும், சட்டசபை தேர்தலில் 2243 பேரும் போட்டியிலுள்ளனர்.

Brisk polling in Seemandhra

சீமாந்திரா பகுதிக்கான சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. மாநிலத்தின் முதலாவது தேர்தல் என்பதால் மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வந்தனர். திருப்பதி, சித்தூர், கடப்பா பகுதியில் இன்று பெய்த மழை காரணமாக வாக்காளர் வரத்து சற்று குறைந்து காணப்பட்டது.

மதியம் 1 மணிவரையிலான நிலவரப்பிட சீமாந்திரா பகுதியில் 48.6 சதவீதம் வாக்குப்பதிவாகியிருந்தது. மேற்கு வங்கத்தில் 45.8 சதவீதமும், ஹிமாச்சல பிரதேசத்தில் 25 சதவீதமும், உத்தரபிரதேசத்தில் 23 சதவீதமும், பிகாரில் 22 சதவீதமும், வாக்குகள் பதிவாகியிருந்தன.

English summary
Twenty-five Lok Sabha and 175 parliamentary constituencies in Seemandhra are set to go to the polls on Wednesday. This will be the first election in the region after the bifurcation of Andhra Pradesh. All eyes will be set on the contest between the YSR Congress and the BJP-TDP combine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X