கோவாவில் கொடூரம்.. பிரிட்டிஷ் நாட்டு பெண் பாலியல் பலாத்காரம்.. தஞ்சை வாலிபர் கைது
Recommended Video

கோவா: பிரிட்டிஷ் நாட்டு பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்த தமிழகத்தை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூரைச் சேர்ந்த எல்லப்பா(30) என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெற்கு கோவாவான திவிம் பகுதிக்கு செல்வதற்காக கனனோ ரயில் நிலையத்தில் நின்றிருந்த பிரிட்டிஷ் நாட்டு பெண், ரயில் வர தாமதம் ஆனதால், தான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பினார்.
உடமைகளை கையில் எடுத்துக் கொண்டுச் சென்ற அவரை பின்தொடர்ந்த எல்லப்பா, பாலோலேம் பகுதியில் சாலையோரம் அந்த பெண்ணை தள்ளிவிட்டுள்ளார். அப்போது, கண்களை தாக்கியதால் நிலைகுலைந்த வெளிநாட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு அவர் வைத்திருந்த கைப்பையில் இருந்து 20 ஆயிரம் ரூபாய், ஏடிஎம் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோவாவிற்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் அந்த பிரிட்டிஷ் நாட்டு பெண்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், கனனோ பகுதியில் இருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை சோதனை செய்ததில், எல்லப்பா பின்தொடர்ந்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, அனைத்து காவல்நிலையங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டு அலர்ட் செய்யப்பட்டது. தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்,மார்கோவா பகுதியில் சுற்றித்திரிந்த எல்லப்பாவை கைது செய்தனர்.
மேலும், ரூ. 32 லட்சம் கொள்ளை வழக்கில் எல்லப்பா மற்றும் அவனது கூட்டாளி தேடப்பட்டு வந்த நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வேறு ஏதும் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனரா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications