2025 வுஷு சாம்பியன்ஷிப்.. அசத்தலாக வென்ற BSF காவலர் ஷிவானிக்கு.. காத்திருந்த சர்ப்ரைஸ்.. சூப்பர்!
உலக வூஷு சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பான செயல்பாட்டிற்காக பி.எஸ்.எஃப் கான்ஸ்டபிள் ஷிவானிக்கு இன்று தலைமை கான்ஸ்டபிளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த பதவி உயர்வு விழா பி.எஸ்.எஃப் டி.ஜி தல்ஜித் சிங் சவுத்ரி தலைமையில் சாவ்லா பி.எஸ்.எஃப் முகாமில் நடைபெற்றது.
கான்ஸ்டபிள் ஷிவானி, பி.எஸ்.எஃப்-பில் ஐந்து மாத சேவையிலேயே இந்த பதவி உயர்வைப் பெற்றுள்ளார். இந்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையிடம் (DoPT) இருந்து தேவையான தளர்வுகளும் அனுமதிகளும் பெறப்பட்டன. பிரேசிலில் நடைபெற்ற 17வது உலக வூஷு சாம்பியன்ஷிப் 2025-ல் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக, பி.எஸ்.எஃப் கான்ஸ்டபிள் ஷிவானிக்கு இன்று தலைமை கான்ஸ்டபிள் பதவி உயர்வு வழங்கப்பட்டது.

பி.எஸ்.எஃப் டி.ஜி தல்ஜித் சிங் சவுத்ரி இந்த விழாவை முன்னின்று நடத்தினார். இதேபோல், கான்ஸ்டபிள் அனுஜ், சீனா நடந்த 10வது சாண்டா உலக வூஷு சாம்பியன்ஷிப்பில் அவரது செயல்திறனுக்காக 2025 ஜூலையில் பதவி உயர்வு பெற்றார்.
கான்ஸ்டபிள் ஷிவானி (தற்போது தலைமை கான்ஸ்டபிள்) பிரேசிலில் நடந்த 17வது உலக வூஷு சாம்பியன்ஷிப் 2025-ல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெள்ளிப் பதக்கம் வென்றார். அவரது பதவி உயர்வு விழாவில் மூத்த பி.எஸ்.எஃப் அதிகாரிகள் மற்றும் பி.எஸ்.எஃப் விளையாட்டுப் பிரிவின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பி.எஸ்.எஃப் டி.ஜி தல்ஜித் சிங் சவுத்ரி, தலைமை கான்ஸ்டபிள் ஷிவானிக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், பி.எஸ்.எஃப் விளையாட்டு வீரர்களிடையே உரையாற்றிய அவர், ஷிவானியின் சிறப்பான விளையாட்டு சாதனை, மற்றும் அவர் பெற்ற பதவி உயர்வு, மற்றவர்கள் பின்பற்ற ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று கூறினார்.
இதற்கு முன்னதாக, 2025 ஜூலையில், பி.எஸ்.எஃப் மத்திய வூஷு அணியைச் சேர்ந்த கான்ஸ்டபிள் அனுஜ், ஏப்ரல் 2025-ல் சீனாவில் நடைபெற்ற 10வது சாண்டா உலக வூஷு சாம்பியன்ஷிப்பில் தனது சிறந்த செயல்பாட்டிற்காக பதவி உயர்வு பெற்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications