பட்ஜெட் 2017: பண ஒழிப்பின் பலனை தொழிலதிபர்களுக்குத் தாரை வார்க்கப் போகும் வங்கிகள்!
டெல்லி: பிரதமர் மோடியின் பண ஒழிப்பு அறிவிப்புக்குப் பிறகு பெரும் பணக்காரர்களின் பணம் வங்கிகளுக்குப் போனதோ இல்லையோ... ஏழைகள், நடுத்தர மக்கள், உயர் நடுத்தர மக்களின் மொத்த சேமிப்பும் வங்கிகளுக்குப் போய்விட்டது.
வங்கிகளில் பணத்தை போட மட்டுமே முடியும். எடுக்க முடியாது அல்லது மிக மிகக் குறைவாகவே எடுக்க முடியும் என்ற நிலை கடந்த மூன்று மாதங்களாக நிலவி வந்தது. இப்போதுதான் ஓரளவு பணம் எடுக்க முடிகிறது.

இப்படி மக்கள் பணத்தை மொத்தமாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டதன் மூலம் அனைத்து வங்கிகளின் ரொக்க இருப்பும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. வட்டியில்லாத டெபாசிட்டுகளாக மாறியுள்ளது மக்களின் பெருமளவு ரொக்கப் பணம். இன்னொரு பக்கம் ரொக்கப் பரிமாற்றம் ஓரளவு குறைந்து டிஜிட்டல்மயத்துக்கு மாறிவிட்டனர் 20 சதவீத மக்கள்.
தங்களிடம் குவிந்துள்ள பணத்தை என்ன செய்யப் போகின்றன வங்கிகள்? அதற்கான விடையை இன்றைய பட்ஜெட் தாக்கலின்போது சொல்லிவிட்டார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி.
'வங்கிகளிடம் இதற்கு முன் இல்லாத அளவுக்கு பெரும் அளவு ரொக்கம் கையிருப்பில் உள்ளது. இதன் மூலம வங்கிகளின் கடன் அளிப்பு சக்தி பெருகியுள்ளது. பெரும் அளவில் கடன்கள் வழங்கப்படும்' என்று அறிவித்துள்ளார் அருண் ஜெட்லி.
கடன் கொடுப்பது என்றால் யாருக்குத் தருவார்கள்? சாதாரண குடிமகனுக்கோ, விவசாயிகளுக்கோ அல்ல. வங்கிகளில் இவர்கள் கடன் பெற வேண்டுமானால் படாத பாடு பட வேண்டும். ஆனால் பெரும் தொழிலதிபர்கள், கார்ப்பொரேட் நிறுவனங்களுக்குத்தான் இந்த வங்கிகளின் மக்களின் பணத்தை கடன்களாகத் தரவிருக்கிறார்கள். ஆனால் இப்படி தரப்படும் கடன்கள் முழுவதுமாக வசூலிக்கப்படுகிறதா? இல்லை என்பதை கடந்த ஆண்டு வெட்டவெளிச்சமானது.
கடந்த ஆண்டு மட்டும் 8000 கோடி ரூபாய் வரை வராக்கடன்களாக அறிவிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டன. இந்தத் தொகையை கட்டத் தவறியவர்கள் பெரும் தொழிலதிபர்கள், பணக்காரர்கள், கார்ப்பொரேட் நிறுவனங்கள்.
இன்னொரு பக்கம் விஜய் மல்லையா மாதிரி பெரும் பணக்காரர்கள் ரூ 7000 கோடிக்கு மேல் கடன் தொகையைத் தராமல் இழுத்தடித்துவிட்டு, வெளிநாட்டில் பதுங்கிக் கொண்டுள்ளனர்.
அம்பானிகள், அதானிகள் போன்ற பெரும் பணக்காரர்களின் நிறுவனங்களிடமிருந்து இன்னும் வசூலிக்கப்படாமல் உள்ள வங்கிக் கடன் தொகை மட்டும் ரூ 1,24,000 கோடிகள்.
இதெல்லாம் வங்கிகளிடம் குறைவான ரொக்க இருப்பு இருந்த காலத்தில் வழங்கப்பட்ட கடன்கள்.
இப்போதோ வரலாறு காணாத ரொக்க இருப்பை வைத்துள்ளன வங்கிகள். பணத்தை அப்படியே வைத்துக் கொண்டிருப்பதால் எந்தப் பலனும் இல்லைதான். அதை சுழற்சியில் விட்டால்தான் வங்கிகளுக்கு வருவாய் கிடைக்கும். நாட்டின் தொழில்களும் நடக்கும்.
இவையெல்லாம் உண்மைதான் என்றாலும், பெரும் தொழிலதிபர்கள், நிறுவனங்களுக்கு தரப்படும் கடன்களை மட்டும் வங்கிகள் வசூலிக்கத் தவறுகின்றன. அரசியல்வாதிகள், ஆட்சியில் உள்ளவர்களின் செல்வாக்குடன், வராக்கடன் கடன் தள்ளுபடி என்ற பலனை பணக்காரர்கள் அனுபவிக்கிறார்கள்.
சில ஆயிரம் ரூபாய் வங்கிக் கடனைக் கட்டமுடியாத விவசாயிகளும் சாதாரண மக்களும் தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இனியாவது மக்கள் பணத்தை பொறுப்புடன் மீட்குமா வங்கிகள்?
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications