பட்ஜெட் 2018: விவசாயத்துறைக்கு அதிக முக்கியத்துவம் - வேளாண் சந்தைகள் அமைக்க ரூ. 2000 கோடி
உணவு பதப்படுத்தல் துறைக்கான முதலீடு 2 மடங்காக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 42 ஹைடெக் உணவு பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
Recommended Video

டெல்லி: விவசாயிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
2018-19ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார்.

பாஜக அரசின் கடைசி முழுமையான பட்ஜெட், ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் ஆகிய காரணங்களால் இதில் முக்கிய அறிவிப்புகள் பல வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த பட்ஜெட்டில் விவசாயத்துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
உணவு பதப்படுத்தல் துறைக்கான முதலீடு 2 மடங்காக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 42 ஹைடெக் உணவு பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
பட்ஜெட்டில் விவசாய துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முக்கிய அம்சங்கள்:
விவசாயிகளுக்கான கடன் அட்டைகள் மீனவர்களுக்கும் வழங்கப்படும். மூங்கில் பயிரிடுவோருக்கும் மத்திய அரசின் உதவிகள் நீட்டிக்கப்படும்
ஆபரேசன் க்ரீன் என்ற பசுமையாக்கும் திட்டத்துக்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு. விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க நிதி ஆயோக் அதிக கவனம் செலுத்தும். விவசாய ஏற்றுமதி 100 பில்லியன் டாலர் மதிப்பை எட்டும். விவசாய ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகள் தளர்தப்படும்.
விவசாயிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் விவசாய பொருட்களின் விளைப்பொருட்களின் விலையை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
இயற்கை வேளாண்மையை விரிவுபடுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மூங்கில் வளர்ப்பை ஊக்கப்படுத்த ரூ.1200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேளாண் பதப்படுத்தும் தொழிலை மேம்படுத்த ரூ.1400 கோடி ஒதுக்கீடு மீன்வள மேம்பாடு, கால்நடை பெருக்க திட்டத்துக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications