பட்ஜெட் கவர்ச்சியாக இருக்காது... மக்கள் இலவசங்களை எதிர்பார்க்கவில்லை... - மோடி
பொதுமக்கள் என்னிடம் நேர்மையான ஆட்சியை தான் எதிர்பார்க்கிறார்களே தவிர அவர்கள் இலவசங்களையும் சலுகைகளையும் எதிர்பார்க்கிறார்கள் என்பது கற்பனையானது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
டெல்லி: அருண்ஜெட்லி தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் கவர்ச்சி பட்ஜெட்டாக இருக்காது என்று பிரதமர் மோடி சூசகமாக கூறியுள்ளார்.
பட்ஜெட் தயாரிப்பு நிதியமைச்சரின் வரம்புக்குள் வருவதால் அதில் நான் தலையிட விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் என்னிடம் நேர்மையான ஆட்சியை தான் எதிர்பார்க்கிறார்களே தவிர அவர்கள் இலவசங்களையும் சலுகைகளையும் எதிர்பார்க்கிறார்கள் என்பது கற்பனையானது என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த பட்ஜெட்டில் சலுகை மழையை எதிர்பார்க்கலாம் என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர். ஆனால் அவ்வாறு எதிர்பார்க்க வேண்டாம் என்று கூறியுள்ளார் மோடி.
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, பொருளாதார வளர்ச்சியை பொருத்தவரை இந்தியாவுக்கு மிகச் சிறந்த இடம் கிடைத்துள்ளது. கடந்த மூன்றரை ஆண்டுகளுக்குள் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

நிதிபற்றாக்குறை குறைவு
முன்பு நிதி பற்றாக்குறை 4.5 சதவீதமாக இருந்தது. தற்போது அது 3.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 4 சதவீதமாக இருந்த நடப்பு கணக்கு பற்றாக்குறை 1 முதல் 2 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. தொழில் செய்வதற்கு இந்தியா மிகச் சிறந்த இடம் என உலக நாடுகள் கூறுகின்றன.

ஒப்பிட்டு பாருங்கள்
10 ஆண்டு கால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியையும், மூன்றரை ஆண்டு கால பாஜக ஆட்சியையும் நாட்டு மக்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். இன்று இந்தியாவின் பொருளாதார கொள்கை எதிர்பார்ப்புகளுடன் ஜொலிக்கிறது. இது மிகப் பெரிய விஷயம்.

வேலைவாய்ப்பு
அன்னிய நேரடி முதலீடு உயர்ந்துள்ளது. வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை என சிலர் பொய் பிரசாரம் செய்கின்றனர். நமது நீதித்துறை வரலாறு சிறப்புமிக்கது. அதில் மிகச் சிறந்த நபர்கள் உள்ளனர். எனவே, நீதித்துறை விவகாரங்களில் இருந்து அரசும் அரசியல் கட்சிகளும் விலகியிருக்க வேண்டும்.

உலக நாடுகள் பாராட்டு
ஒரு நாட்டில் நடுத்தர மக்கள் அதிகம் இருந்தால், 35 வயதுக்கு உட்பட்டோர் 80 கோடி பேர் இருந்தால், அங்கு ஜனநாயகமும் இருந்தால், அந்த நாடு உலக நாடுகளை ஈர்ப்பது இயல்பானது. சர்வதேச நிதியம், உலக வங்கி, மூடிஸ், போன்ற அமைப்புகள் எல்லாம் இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளை பாராட்டுகின்றன.

பணமதிப்பு நீக்கம்
பணமதிப்பு நீக்கம் மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது. இது ஒரு பணத்தை ஒழித்து மற்றொரு பணத்தை கொண்டு வரும் விஷயம் அல்ல. இந்தியாவின் கூட்டாட்சி முறை, மத்திய அரசின் நிர்வாகம், ரிசர்வ் வங்கி ஆகியவை இணைந்து எடுத்த நடவடிக்கை. இது இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் மேலும் உயர்த்தியுள்ளது எனறார். 7 ஆண்டு காலமாக விவாதிக்கப்பட்டு வந்த ஜிஎஸ்டி எல்லா அரசியல் கட்சிகளின் அனுமதியுடன் அமல்படுத்தப்பட்டது.

2018 பட்ஜெட் எப்படி
அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட் எப்படி இருக்கும்? லோக்சபா தேர்தலுக்காக சலுகைகள் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் அதிகம் வெளியாகும் என்ற தகவல் வெளியாகி வருகிறதே? என்ற கேள்விக்கு, மோடி மறுப்பு தெரிவித்தார்.

இலவசங்களை எதிர்பார்க்கவில்லை
பட்ஜெட் தயாரிப்பு நிதியமைச்சரின் வரம்புக்குள் வருவதால் அதில் நான் தலையிட விரும்பவில்லை. பொதுமக்கள் என்னிடம் நேர்மையான ஆட்சியை தான் எதிர்பார்க்கிறார்களே தவிர அவர்கள் இலவசங்களையும் சலுகைகளையும் எதிர்பார்க்கிறார்கள் என்பது கற்பனையானது. சாமானிய மக்களின் தேவைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்ற எனது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications