கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கட்டிடத்தில் குண்டு வெடிப்பு.. குண்டு தயாரிக்க முயன்றபோது வெடித்ததா?
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கன்னூர் நகரில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகருக்கு சொந்தமான கட்டிடத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கும் எப்போதுமே மோதல்தான். இரு தரப்பிலும் பல கொலைகள் நடந்துள்ளன.

பினராயி விஜயன் தலைமையிலான அரசு அமைந்த பிறகுதான், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அதிக அளவில் படுகொலை செய்யப்படுவதாக பாஜக தலைமையே நேரடியாக கோதாவில் குதித்து கண்டன பேரணிகளை நடத்தியது. அமித்ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் என பாஜகவின் மேல்மட்ட பிரபலங்கள் கேரளாவில் முற்றுகையிட்டனர்.
இந்த நிலையில், கன்னூர் மாநிலத்திலுள்ள வலயங்கதன் ரகு என்ற ஆர்.எஸ்.எஸ் தொண்டருக்கு சொந்தமான பில்டிங் ஒன்றில் இன்று பயங்கர சத்தத்தோடு குண்டு வெடித்தது.
தகவல் அறிந்ததும் போலீசார் அந்த கட்டிடத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்தத சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதேநேரம், கட்டிடத்திற்குள் இருந்து வெடிமருந்து சுமார் அரை கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.
குண்டு தயாரிக்க வலயங்கதன் ரகு இந்த வெடிமருந்துகளை சேமித்து வைத்திருந்தாரா என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications