அடடா... தெலுங்கானா முதல்வருக்கு "குண்டு" துளைக்காத பாத்ரூம்!
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் குண்டு துளைக்காத குளியலறையை பயன்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் குண்டு துளைக்காத கார் மற்றும் பஸ்ஸை தொடர்ந்து தற்போது குண்டு துளைக்காத குளியலறையையும் பயன்படுத்த உள்ளார்.
தெலுங்கானா முதல்வராக உள்ள சந்திரசேகர ராவ், குண்டு துளைக்காத கப்பல் போன்ற கார், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ஸ் நிறுவனத்தின் பஸ், இசட் பிளஸ் செக்யூரிட்டி என எப்போதும் பெரும் பாதுகாப்பு வளையத்துடனே வலம் வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கான மாநிலம் பேகம்பேட்டில் ஒரு லட்சம் சதுர அடியில் அரண்மனை போன்று கட்டப்பட்டுள்ள அவரது புதிய வீட்டில் உள்ள அனைத்து ஜன்னல்களும் குண்டு துளைக்காத கண்ணாடிகளால் பொருத்தப்பட்டுள்ளன.

குண்டு துளைக்காத வீடு
சந்திரசேகர ராவின் 2 படுக்கையறைகள் மற்றும் அவரது குளியலறையும் குண்டு துளைக்காத வகையில் பிரத்தியோகமாக அமைக்கப்பட்டுள்ளது. அவரது மகன் கேடிஆர் பயன்படுத்தும் அறைகளும் கார்களும் இதேபோல் குண்டுதுளைக்காத பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள உயர்தர கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

எட்டிப் பார்க்க முடியாது
மேலும் இந்த வீட்டை யாரும் எட்டிப்பார்க்காத வகையில் உயரமான சுற்றுச்சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. அலுவலகம் மற்றும் வீடு என சேர்த்து கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில் சந்திரசேகர ராவ் நாளை குடியேறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டைச் சுற்றிலும் எப்போதும் ஆயுதமேந்திய 50 காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டிருப்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒப்படைத்து விட்டு போங்க
சந்திரசேகர ராவை சந்திக்க யாரேனும் வந்தால் அவர்கள் கொண்டு வரும் மொபைல் போன், அணிந்திருக்கும் வாட்ச் மற்றும் ஏதேனும் மெட்டல் பொருட்கள் இருந்தால் அவை எல்லாவற்றையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பவர்களிடம் ஒப்படைத்துவிட்டு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குண்டு துளைக்காத பாத்ரூம் எதுக்கோ!
மாநில உளவுத்துறை அறிவுறுத்தலின் அடிப்படையில் சந்திரசேகராவ் இத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளாராம். அதுக்காக குளியலறையை எதுக்கு குண்டு துளைக்காததாக மாற்றியுள்ளனர் என்பதுதான் மக்களின் கேள்வியாக உள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications