மோடிக்கு எதிராக ஜப்பான் அரசுக்கு கடிதம் அனுப்பிய குஜராத் விவசாயிகள்.. ஏன் தெரியுமா?
மும்பைக்கும் அஹமதாபாத்துக்கும் இடையில் விடப்படும் புல்லட் ரயில் திட்டத்திற்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் குஜராத் விவசாயிகள் ஜப்பான் அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
டெல்லி: மும்பைக்கும் அஹமதாபாத்துக்கும் இடையில் விடப்படும் புல்லட் ரயில் திட்டத்திற்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் குஜராத் விவசாயிகள் ஜப்பான் அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
மத்திய பாஜக அரசு புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக முனைந்து வருகிறது. ஆதார், தூய்மை இந்தியா, மேக் இன் இந்தியா, யோகா ஆகியவை இந்த அரசுக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு புல்லட் ரயில் திட்டமும் முக்கியம்.
இந்த திட்டம் ஜப்பானுக்கு உதவும், இதை முடிக்க முடியாது, இதனால் வருமானம் கிடையாது என்று பல சர்ச்சைகள் இதை சுற்றி சுழன்று கொண்டு இருக்கிறது.

திட்டம் என்ன
இந்தியாவில் 2023க்குள் புல்லட் ரயிலை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ரயில் மஹாராஷ்டிரா தலைநகர் மும்பைக்கும், குஜராத்தின் அஹமதாபாத்துக்கும் இடையில் இயக்கப்படும். இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் இதுவாகும். இதை 2020க்குள் முடிக்கவும் அரசு யோசனை செய்து வருகிறது.

ஜப்பான் உதவி செய்கிறது
1.60 லட்சம் கோடி இதற்கு செலவு ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் 1.10லட்சம் கோடி ரூபாயை ஜப்பான் அரசு கடனாக கொடுக்கிறது. ஜப்பான் அரசு மூலம் ''ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம்'' வழங்கும் பணத்தில் ஜப்பான் ஊழியர்கள் இந்த புல்லட் ரயில் பாதையை போட இருக்கிறார்கள்.

நிலம்
இதற்காக குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவில் சுமார் 1400 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் 1120 ஏக்கர் நிலம் தனியாருடையது. அதில் 900 ஏக்கர் நிலம் விவசாய நிலம். இதனால் பல ஆயிரம் விவசாயிகள் பாதிக்கப்பட இருக்கிறார்கள். பலருடைய நிலம் ஏற்கனவே இதற்காக வாங்கப்பட்டுவிட்டது.

கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்
இதனால் வெகுண்டெழுந்த விவசாயிகள் பிரதமர் மோடிக்கு எதிராகவும், இந்த திட்டத்திற்கு எதிராகவும் ஜப்பான் அரசுக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். அதேபோல் பணம் வழங்கும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் இதற்காக கடிதம் எழுதியுள்ளனர். 1000 குஜராத் விவசாயிகள் கூட்டாக இந்த கடிதத்தை அனுப்பி உள்ளனர். இந்த திட்டத்தை நிறுத்தும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.

வழக்கு தொடுத்தனர்
அதே சமயம் இந்த திட்டத்திற்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது. விவசாயிகளின் நிலம் முறையின்றி பறிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மோடியின் கோட்டையான குஜராத்திலேயே அவருக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது பாஜகவை அதிர்ச்சி அளிக்க வைத்துள்ளது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications