For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீர் பெண்கள் இப்போதுதான் பாதுகாப்பாக இருக்கிறார்கள்... ஐஜி முனீர்கான் தகவல்!

பெண்களுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்து வந்த தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ள நிலையில், இப்போதுதான் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசிக்கும் இளம்பெண்கள் பாதுகாப்பாக வாழ்கிறார்கள் என்று அம்மாநில போலீஸ் ஐஜி முனீர்கா

By Devarajan
Google Oneindia Tamil News

ஜம்மு: காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பாலியல் தொல்லைக் கொடுத்து வந்த தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதால் காஷ்மீர் மாநில பெண்கள் இப்போது பாதுகாப்பாக வசிப்பதாக உணருகிறார்கள் என்று அம்மாநில ஐஜி முனீர் கான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முனீர் கான் மேலும் கூறுகையில், " காஷ்மீரில் பெண்கள் பலருக்குத் திருமணம் செய்வதாக ஆசை வாரத்தைக் கூறி, கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து அவர்களை ஏமாற்றுவதை லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் வழக்கமாக வைத்துள்ளனர்.

Burhan Wani and Abu Dujana were killed because of their ex-girlfriends

அவர்களில் அபு துஜானா அண்மையில் கொல்லப்பட்டார். இதனால் அவரால் பாதிக்கப்பட்டவர்கள் நிம்மதியடைந்துள்ளனர். ஏன் எனில், கண்ணில் படும் பெண்களை எல்லாம் பாலியல் தொல்லைக்கு உட்படுத்துவதே துஜானாவின் வழக்கம்.

அதன்படி கடைசியாக துஜானா தூக்கிச் சென்ற இளம்பெண், பீன்ஸ் விதையை வழி நெடுக போட்டுச் சென்று, தான் அடைக்கப்பட்ட இடத்தை போலீசாருக்கு காட்டிக் கொடுத்தார். முடிவில் துஜானா கொல்லப்பட்டார்.

அதே போலவே புர்கான் வானியும் அபு தல்லாஹ் என்ற இருவரும் , பெண்களுக்கு தொல்லைக் கொடுத்த நிலையில் கொல்லப்பட்டனர். இப்போது காஷ்மீர் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்" என்று ஐஜி கூறினார்.

English summary
Kashmir, Inspector General of Police Muneer Khan said, Burhan Wani and Abu Dujana were killed because of their ex-girlfriends.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X