கண்முன்னே பாய்ந்த தோட்டாக்கள்... தன்னுயிரைப் பற்றி கவலைப்படாமல் 50 பக்தர்களை காப்பாற்றிய டிரைவர்
தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கண்முன்னே தோட்டாக்கள் சீறிப்பாய்ந்த நிலையில், தன் உயிரைப் பற்றியும் கவலைப்படாமல் 50 யாத்ரீகர்களை பஸ் டிரைவர் காப்பாற்றியுள்ளார். அவருக்கு சமூக வலைதளங்களில்
அமர்நாத்: தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கண்முன்னே தோட்டாக்கள் சீறிப் பாய்ந்த நிலையில், தன் உயிரை துச்சமென நினைத்து பேருந்தை ஓட்டிச் சென்று 50 அமர்நாத் யாத்ரீகர்களை பஸ் டிரைவர் சலீம் காப்பாற்றியுள்ளார். அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் பகுதியில் அமர்நாத் யாத்திரியை முடித்து திரும்பி வந்து கொண்டிருந்த ஆன்மீகப் பயணிகளின் பேருந்தை குறி வைத்து தீவிரவாதிகள் நேற்று இரவு நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

20 பேர் படுகாயம் அடைந்தனர். காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த சில வருடங்களில் நடைபெற்ற மோசமான தாக்குதல் இது என்பதால் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டின் நடுவே தனது உயிரை பணயம் வைத்து பேருந்தில் பயணித்த 50 பேரின் உயிரை டிரைவர் காப்பாற்றியுள்ளார். அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

57 பயணிகள் சென்ற அந்த பேருந்தை ஷேக் சலீம் என்ற டிரைவில் ஓட்டி வந்தார். துப்பாக்கி சூடு தொடங்கியதும் டிரைவர் சலீம் பேருந்தை நிறுத்தி இருந்தால் உயிர்பலி எண்ணிக்கை அதிகமாயிருக்கும்.
ஆனால் அவர் பேருந்தை நிறுத்தாமல் பாதுகாப்பான இடத்தை நோக்கி வேகமாக ஓட்டிச் சென்றார். இருட்டான பகுதிக்குள் சென்று பேருந்தினை பத்திரமாக நிறுத்தினார்.
காயமடைந்து மருத்துவமனையில் உள்ள ஒருவர் கூறுகையில், "அனைத்துப் பகுதிகளில் இருந்தும் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தனர். சில நிமிடங்கள் வரை இது தொடர்ந்தது. எங்களுடைய டிரைவர் துப்பாக்கிச் சூட்டை பொருட்படுத்தாமல் சில கிலோமீட்டர் தூரம் பேருந்தை ஓட்டிச் சென்றார். அவர் எங்களை மிக சாதுரியமாகக் காப்பாற்றினார்" என்று தெரிவித்தார் நன்றிப்பெருக்கோடு.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications