உடுப்பி அருகே பயங்கரம்... பள்ளி வேன்-பஸ் மோதல்.. 6 மாணவிகள் உட்பட 8 பேர் பரிதாப சாவு
உடுப்பி: கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே பள்ளி வேன்-தனியார் பஸ் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் என மொத்தம் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆசிரியை ஒருவர் உட்பட 12 பேர் படுகாயமடைந்தனர்.
உடுப்பி அடுத்த குந்தாப்பூர் அருகேயுள்ள டான்பாஸ்கோ பள்ளிக்கு இயக்கப்படும், தனியார் ஆம்னி வேனில் ஆசிரியை பிலோமினா மற்றும் மாணவ, மாணவிகள் என 18 பேர் பயணித்தனர்.

இந்த வேன், டிராசி பகுதியிலுள்ள மொகடி கிராஸ் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, பைந்தூரிலிருந்து குந்தாப்பூருக்கு சென்று கொண்டிருந்த தனியார் பஸ்சுடன் நேருக்கு நேர் மோதியது.

இந்த கோர விபத்தில் 7ம் வகுப்பு மாணவி நிகிதா, எல்கேஜி மாணவி களிஷ்டா, ஒன்றாம் வகுப்பு மாணவி, அனன்யா, செலிஷ்டா, அல்விடா உட்பட 6 மாணவிகளும், 2 மாணவர்களும் உயிரிழந்தனர்.

ஆசிரியை உட்பட 12 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்ட போலீஸ் எஸ்.பி.அண்ணாமலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.













Click it and Unblock the Notifications