Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆப்பிள் லேப்டாப்பை வியட்நாம் போய் வாங்கிய இந்தியர்.. விமான டிக்கெட் சேர்த்தும் பல ஆயிரம் மிச்சமாம்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஒருவர் நமது நாட்டில் ஆப்பிள் லேப்டாப்பை (apple macbook) வாங்குவதற்குப் பதிலாக வியட்நாம் போய் வாங்கியுள்ளார். விமானக் கட்டணம், அங்கு ஹோட்டல் கட்டணம் என அனைத்தையும் சேர்த்தால் கூட இந்தியாவில் விற்கப்படும் விலையை விடக் குறைவாகவே இருப்பதாக அவர் பதிவிட்டுள்ளார். அவரது இந்த போஸ்ட் இணையத்தில் டிரெண்டானது. பலரும் இதைப் பார்த்து வியந்து போனார்கள். உண்மையில் வியட்நாமில் ஆப்பிள் மேக்புக் விலை குறைவா? பணத்தை சேமிக்க முடியுமா? என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

சமீபத்தில் ரெடிட் யூசர் ஒருவர் ஆப்பிள் லேப்டாப்பை இந்தியாவில் வாங்குவதற்குப் பதிலாக வியட்நாமில் வாங்கினால் பணத்தைச் சேமிக்க முடியும் எனப் பதிவிட்டிருந்தார். அதாவது இந்தியாவில் ஆப்பிள் மேக்புக் வாங்குவதற்குப் பதிலாக, அதே தொகையைப் பயன்படுத்தி வியட்நாமிற்குச் சென்று, 11 நாட்கள் குறைந்த பட்ஜெட் ஒரு ஜாலி சுற்றுலாவைப் போட்டுவிட்டு, அங்கு அதே ஆப்பிள் மேக்புக்கை வாங்கியதாகப் பதிவிட்டுள்ளார்.

Buying Apple Macbook in vietnam saves money than in India

பணம் சேமிக்கலாம்

அந்த ரெட்டிட் யூசர், "மேக்புக் வாங்கவே நான் இந்தியாவிலிருந்து வியட்நாமிற்குச் சென்றேன். இந்தியாவில் நீங்கள் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள மேக்புக் அல்லது ஐபோன் வாங்கத் திட்டமிட்டிருந்தால், வியட்நாமிற்கு போய் வாங்கலாம். அது உண்மையில் உங்கள் பணத்தைச் சேமிக்க உதவும். அங்கே நீங்கள் கேட்கும் சாதனங்கள் கம்மி விலையில் கிடைக்கும். மேலும் ஒரு சின்ன ஜாலி டிரிப்பையும் அனுபவிக்கலாம்.

இந்தியாவில் கார்டு சலுகைகளுடன் மேக்புக் 1.85 லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்கு இருந்தது . ஆனால் வியட்நாமில் அதன் விலை குறைவு.. நீங்கள் அங்கு வாங்கும் பொருட்களுக்கு பில் கொடுத்து விமான நிலையத்தில் மதிப்புக் கூட்டப்பட்ட வரியைத் திரும்பப் பெறலாம். அப்படி எனக்கு ஆப்பிள் மேக்புக் 1.48 லட்சம் ரூபாய்க்குக் கிடைத்தது. இதன் மூலம் எனக்கு ரூ.36,500 மிச்சம்" என்று பதிவிட்டுள்ளார்.

வெறும் ரூ.12,000

அதாவது அவர் மொத்தம் 11 நாட்கள் வியட்நாமை சுற்றிப் பார்த்துள்ளார். இதற்கும் புதிய மேக்புக்கிற்கும் மொத்தமாக அவர் ரூ.2.08 லட்சம் செலவழித்துள்ளார். வாட் வரி விமான நிலையத்தில் திரும்ப வந்துவிட்டதால் அவரது செலவு ரூ.1.97 லட்சமாக இருந்துள்ளது. இதன் மூலம் கூடுதலாக இந்தியாவில் வாங்குவதை விட கூடுதலாக வெறும் ரூ.12 ஆயிரம் செலவழித்து வியட்நாம் சுற்றுலாவையே முடித்துவிட்டாராம்.

மொத்தச் செலவுகள்

  • இருவழி விமான டிக்கெட்– 19,000 ரூபாய்
  • இ-விசா – 2,210 ரூபாய்
  • சுற்றி பார்க்க ஆன செலவுகள்- ரூ.10,000
  • தங்குமிடம் (11 இரவுகள்) – 4,000 ரூபாய்
  • உணவு மற்றும் இதர செலவுகள் – 5,000 ரூபாய்

அங்கு மொத்தமே அவருக்கு இவ்வளவு மட்டுமே செலவாகியிருக்கிறது. மேக்புக் வாங்க இருந்த தொகையை வைத்து அவர் வியட்நாம் பயணத்தையே முடித்துள்ளார். இது ஒரு பட்ஜெட் பயணமாக இருந்ததால் இது சாத்தியமாகியுள்ளது. அதேநேரம் அவர் ஒரு ஹோட்டலில் தங்கினால் இதை விட செலவு அதிகரிக்கவே செய்திருக்கும்.

நோட் செய்ய வேண்டியது

ஒருவேளை பட்ஜெட் விலையில் இல்லாமல் நீங்கள் ஒரு சவுகரியமான டிரிப்பை பிளான் செய்தால் குறைந்தது. ரூ.72,000 ஆகும். அப்படி பார்த்தால் மேக்புக் உடன் சேர்த்து 1.48 லட்சம் ரூபாய் செலவாகும். எனவே, ஒட்டுமொத்தமாக 2.20 லட்சம் ரூபாய் செலவாகும். அப்படி பார்த்தால் சுமார் ரூ.42 ஆயிரம் விட அதிகம் செலவாகும். அப்போது உங்களுக்கு பணம் மிச்சமாவது குறையும்.

அதாவது பட்ஜெட் விலையில் நீங்கள் செலவுகளை முடித்துக் கொள்ள ரெடி என்றால் வியட்நாம் போய் ஆப்பிள் மேக்புக் வாங்குவது சிறந்த ஒரு ஆப்ஷனாகவே இருக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+