For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாடு முழுக்க 4 லோக்சபா, 8 சட்டசபை தொகுதிகளிலும் முடிந்தது வாக்குப்பதிவு! 22ல் வாக்கு எண்ணிக்கை

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதிலும் இன்று 4 லோக்சபா தொகுதிகளிலும், தமிழகத்தின் 3 உட்பட 8 சட்டசபை தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

மத்தியபிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாமில் உள்ள மொத்தம் 4 லோக்சபா தொகுதிக்கும், 6 மாநிலங்களில் உள்ள 8 சட்ட சபை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம், திரிபுரா, அஸ்ஸாம், அருணாச்சலபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகியவை அந்த மாநிலங்களாகும்.

By-polls in Assam, Bengal, Arunachal, MP, Puducherry, TN and WB

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. இதேபோன்று அருணாச்சலபிரதேசம், அஸ்ஸாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் ம.பி.யின் ஷாடால், அஸாமின் லகிம்பூர் ஆகியவை பாஜக வென்ற தொகுதிகளாகும். தொகுதிகள் முழுவதும் உள்ளூர் போலீஸாருடன் துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மத்திய அரசு உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து நீக்கியதை அடுத்து, இந்த தேர்தல்கள் நடப்பதால் மக்கள் மனநிலையை இத்தேர்தல் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 22ம் தேதி நடக்கும் வாக்கு எண்ணிக்கையின்போது அது தெரியவரும்.

60-நாடு முழுவதிலும் இன்று 4 லோக்சபா தொகுதிகளிலும், தமிழகத்தின் 3 உட்பட 8 சட்டசபை தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

English summary
By-polls in Assam, Bengal, Arunachal, MP, Puducherry, TN and WB going underway.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X