உ.பி.யின் கைரானா உட்பட 4 லோக்சபா தொகுதிகளுக்கு மே 28-ல் இடைத் தேர்தல்
4 லோக்சபா தொகுதிகளுக்கு மே 28-ல் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

உ.பி.யில் மே 28-ல் இடைத் தேர்தல் | ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் இன்று தீர்ப்பு
டெல்லி: உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, நாகாலாந்து மாநிலங்களில் 4 லோக்சபா தொகுதிகளுக்கு மே 28-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவின் பால்கர் தொகுதிகளின் பாஜக எம்.பி.க்கள் அண்மையில் காலமாகினார். மகாராஷ்டிராவின் பந்தாரா பாஜக எம்பி நானா படேல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்தார்.

நாகாலாந்து தொகுதி எம்பி நெபியூ ரியோ, மாநிலத்தின் முதல்வரானதால் பதவியை ராஜினாமா செய்தார். இந்த 4 தொகுதிகளுக்கும் மே 28-ல் இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் மே 31-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
மேலும் மேகாலயா, பஞ்சாப், கேரளா உட்பட 9 மாநிலங்களில் 10 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 28-ல் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications