தேசமே எதிர்த்த சட்டம்.. “சிஏஏ 7 நாட்களில் அமல்படுத்தப்படும்!” பரபரப்பை பற்ற வைத்த மத்திய அமைச்சர்
கொல்கத்தா: நாடு முழுவதும் 7 நாட்களுக்குள் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும் என மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்து உள்ளார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக வசிக்கும் இந்து, சீக்கியம், பவுத்தம், சமணம், பார்சி, கிறிஸ்தவம் ஆகிய 6 மதங்களைச் சேர்ந்தவர்கள் மத ரீதியிலான துன்புறுத்தலின் காரணமாக அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் அகதியாக தஞ்சம் புகுந்தால் அவர்களுக்கு குறிப்பிட்ட சில ஆண்டுகள் கழித்து குடியுரிமை வழங்க மத்திய பாஜக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறி குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமானது. 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்த சட்டம் அமலுக்கு வருவதாக இருந்தது. ஆனால், இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் எழுப்பப்படும் கேள்விகள் மாற்றப்படும், என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பலரது குடியுரிமை பறிக்கப்படும் அபாயம் உள்ளது எனக் கூறி பல்வேறு தரப்பினர் இதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தனர்.
குறிப்பாக இந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ள மதங்களில் இஸ்லாம் இடம்பெறாததை சுட்டிக்காட்டி ஒரு மதத்தினருக்கு எதிராக இச்சட்டம் கொண்டு வரப்பட்டதாக விமர்சனம் எழுந்தது. இலங்கையும் இதில் இடம்பெறாத காரணத்தால் ஈழத் தமிழர்களுக்கும் இதனால் பயனில்லை என்ற விமர்சனம் எழுந்தது. இதனை கண்டித்து நாடு முழுவதும் இஸ்லாமியர்கள், மாணவர்கள், பல்வேறு சமூக அமைப்புகள், அரசியல் இயக்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். டெல்லி தொடங்கி தமிழ்நாடு வரை ஷாகின் பாக் போராட்டங்கள் பல நாட்களாக நடைபெற்றன.
இதனை தொடர்ந்து வந்த கொரோனா பெருந்தொற்று காரணமாக பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு காரணமாக போராட்டங்கள் நிறுத்தப்பட்டாலும் இன்று வரை இதற்கான எதிர்ப்பு என்பது மக்கள் மத்தியில் தொடர்கிறது. ஆனால் மத்திய அரசோ இதற்கான விதிகள் வகுக்கப்பட்ட பிறகு இந்த சட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்தது. இதுவரை இந்த சட்டம் அமலுக்கு வரவில்லை. தற்போது பாஜக அரசின் ஆட்சிக் காலம் நிறைவடைந்து 2024 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள சூழலில் குடியுரிமை திருத்தச் சட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் தெரிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், "அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டு இருக்கிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை திடீரென அமல்படுத்துவது நாட்டில் பதட்டமான சூழ்நிலை உருவாக்கி இருக்கலாம். சிஏஏ சட்டம் மதம், சமூகம், கொள்கைகளை மனதில் வைத்து அமலுக்கு வரும். மத்திய உள்துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது. 7 நாட்களுக்குள் இந்தியாவில் சிஏஏ அமல்படுத்தப்படும் என நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். மத்திய அரசின் பிரச்னை. தனியாக இதை மேற்கு வங்க மாநிலத்தில் அமல்படுத்த தேவை இல்லை. முதலமைச்சரிடமும் இது பற்றி பேச வேண்டிய அவசியமில்லை." என்று தெரிவித்து உள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications