தெலுங்கானா குறித்து மத்திய அமைச்சரவை கூடி முக்கிய ஆலோசனை!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தெலுங்கானா குறித்து இன்றைய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
2 மாதங்களுக்கு முன்பு தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கப்படும் என்றும் சீமாந்திரா, தெலுங்கானாவுக்கு 10 ஆண்டுகாலத்துக்கு ஹைதராபாத் பொதுதலைநகராக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தெலுங்கானா அமைக்க ஒப்புதல் தெரிவித்து சட்ட அமைச்சகம், மத்திய அமைச்சரவைக்கு குறிப்பு அனுப்பியது.
அதில் ஹைதராபாத் பொதுதலைநகராக இருக்கும் என்ற நிலைப்பாடு மாற்றப்பட்டுள்ளது. தெலுங்கானாவுக்கு மட்டுமே ஹைதராபாத் தலைநகராக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இன்று தெலுங்கானா குறித்து விவாதிக்க மத்திய அமைச்சரவை கூடியது. கூட்டம் நடைபெற்றது. அதில் தெலுங்கானா அமைப்பது தொடர்பான நடைமுறைகள் விவாதிக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications