அன்னா ஹசாரே சிரிப்பார்.. கிரண் பேடி!
டெல்லி: அன்னா ஹசாரேவைத் தொடர்பு கொள்ள பலமுறை போனில் முயன்றும் அவருடன் தன்னால் பேச முடியவில்லை என்று கிரண் பேடி கூறியுள்ளார்.
அன்னாவுடனும், கெஜ்ரிவாலுடனும் இணைந்து ஆரம்பத்தில் செயல்பட்டவர் கிரண் பேடி. ஆனால் காலப் போக்கில் ஆளுக்கு ஒரு பக்கமாக மூன்று பேருமே பிரிந்து போய் விட்டனர். இந்த நிலையில் கிரண் பேடி தற்போது பாஜகவில் சேர்ந்து விட்டார்.

இதனால் அன்னா ஹசாரே கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிரண் பேடியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அன்னா ஹசாரேவுக்கு நான் பலதடவை தொலைபேசியில் பேச முயற்சி செய்தேன். அப்போதெல்லாம் ஒன்று அவர் தூங்கிக் கொண்டிருந்தார் அல்லது ஓய்வில் இருந்தார். அதனால் பேச முடியவில்லை.
விடாமல் நான் தொலைபேசியில் பேச முயற்சிப்பேன். ஒரு வேளை அன்னா என்னிடம் பேசினால் என்ன சொல்வார் எனக்கு இப்போதே தெரியும். அவர் சிரிப்பார், அவ்வளவுதான் என்று கூறியுள்ளார் பேடி.
65 வயதான கிரண் பேடி, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஆவார். ஆரம்பத்தில் அன்னா, கெஜ்ரிவால் ஆகியோருடன் இணைந்து ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். பின்னர் இந்தக் கூட்டணி உடைந்தது.
ஜனவரி 15ம் தேதி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார் கிரண் பேடி. ஆனால் தான் பாஜகவில் சேரப் போவது குறித்து அன்னாவிடம் தெரிவிக்கவில்லையாம் பேடி. இதனால் அன்னா அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications