கொஞ்சி கொஞ்சியே "ஸ்வீட் பேபி"யிடம் கவிழ்ந்த ஆபீசர்.. கிறுகிறுக்கவிட்ட பாலியல் கேஸ்! நீதிபதி ஒரே போடு
கொல்கத்தா: எத்தனையோ விசித்திரமான வழக்குகள் நீதிமன்றங்களுக்கு செல்கின்றன.. அதனடிப்படையில் பல்வேறு அதிரடி தீர்ப்புகளையும் நீதிமன்றங்கள் பிறப்பித்து வருகின்றன.. இதோ இப்போதும் ஒரு உத்தரவு போட்டிருக்கிறது பாருங்கள்.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்தபடியே வருகிறது.. பெண்குழந்தைகளுக்கான பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவருகிறது.

பாலியல் குற்றம்: பாலியல் வன்கொடுமைகளிலிருந்து காப்பதற்காகவே, போக்சோ போன்ற சட்டங்களை அரசு கொண்டுவந்திருந்தாலும், குற்றங்களின் எண்ணிக்கை பெருகி கொண்டே இருக்கிறது. அப்படியானால், சட்டத்தை இன்னும் தீவிரப்படுத்த வேண்டியிருப்பதாக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கிறார்கள்.
காரணம், வேலை செய்யும் இடங்களிலும்கூட பெண்களுக்கான பாலியல் கொடுமைகள் அதிகமாகிவருகிறது.. படித்த பெண்களே என்றாலும்கூட, இதுபோன்ற சிக்கல்களை சிலசமயங்களில் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
கடற்படை: இப்படித்தான், கடற்படையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. இந்திய கடற்படையில் பயிற்சிக்காக சேர்ந்திருக்கிறார் அந்த இளம்பெண்.. இவரது உயரதிகாரி, இவரை எப்போதுமே பெயர் சொல்லி கூப்பிடமாட்டாராம்.. அதற்கு பதில், 'ஸ்வீட் பேபி' என்றுதான் செல்லமாக கூப்பிடுவாராம்.. டிரெயினிங்கில் சேர்ந்ததில் இருந்தே, அந்த அதிகாரி இப்படியேதான் அப்பெண்ணை கூப்பிட்டு வந்துள்ளார்.
ஸ்வீட் பேபி என்று தன்னை கூப்பிட வேண்டாம் என்று அந்த பெண் பலமுறை சொல்லிவிட்டாராம்.. ஆனாலும், அந்த ஆபீசர் கேட்கவில்லையாம்.. இதனால் உச்சக்கட்ட எரிச்சலடைந்த அந்த பெண், கோர்ட்டுக்கு ஓடினார்.
உயரதிகாரி: எத்தனையோ முறை ஸ்வீட் பேபி என்று தன்னை அழைக்க வேண்டாம் என்று சொல்லயும், உயரதிகாரி நிறுத்துவதில்லை, அதனால், அவர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கை பதிவு செய்ய வேண்டும் என்று கொல்கத்தா ஹைகோர்ட்டில் அந்த பெண் மனு தாக்கல் செய்தார்... இந்த மனுவானது நீதிபதி சப்யசாச்சி பட்டாச்சார்யா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, எதிர்தரப்பு கடற்படை ஆபீசர் தன் தரப்பு நியாயத்தை எடுத்து வைத்தார்.. ஸ்வீட் பேபி என்ற வார்த்தையை பாலியல் ரீதியாக பயன்படுத்தவில்லை என்றும், அப்படி கூப்பிட்டால் தனக்கு பிடிக்கவில்லை என்று அந்த பெண் சொன்னபிறகு, ஒருபோதும் அதன் வார்த்தையை தான் பயன்படுத்தவில்லை என்றும் கூறினார்.
நீதிபதி அதிரடி: இரு தரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டறிந்தார்.. பிறகு, "பேபி, அல்லது ஸ்வீட்டி இப்படியான வார்த்தைகளால் அழைப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் அடங்காது.. பாலியல் துன்புறுத்தல் என்று சொல்லாடலும் பொருத்தமற்றது... இன்றைய சமூக சூழலில், இப்படியான வார்த்தைகள் எல்லாம் சர்வசாதாரணமாக பயன்படுத்தக்கூடியதுதான்..
இந்த வார்த்தைகளுக்கு பாலியல் சாயம் பூச தேவையில்லை.. இப்படி ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் கண்டுபிடித்து, பாலியல் துன்புறுத்தல் புகார்களை கொண்டுவந்தால், அது பெண்களை பாதுகாக்கும் சட்டங்களுக்கே எதிரானதாக மாறிவிடும்...
துன்புறுத்தல்: அதேசமயம், சம்பந்தப்பட்ட பெண், இப்படியான வார்த்தைகளை தன்னிடம் பயன்படுத்த வேண்டாம், தனக்கு அசௌகரியமாக இருக்கிறது என்று பலமுறை சொல்லியும்கூட, அதை எதிர்தரப்பு தொடர்ந்து செய்திருக்கிறார். உயரதிகாரி அப்படி செய்திருக்கக்கூடாது" என்றும் சொல்லி, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications