பொய்யாகப் பேசுகிறார் மோடி.. சொல்கிறார் திக்விஜய் சிங்

Subscribe to Oneindia Tamil

Digvijay singh
டெல்லி: நரேந்திரமோடி பொய்யாகப் பேசி வருகிறார். பொய்யான தகவல்களையே தொடர்ந்து கூறி வருகிறார் என்று தாக்கியுள்ளார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங்.

இதுகுறித்து அவர் கூறுகையில், என்ஆர்ஐகளுக்கான மோடியின் வீடியோ உரையில் வெறும் பொய்களே நிரம்பியுள்ளன. அவர் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் வளர்ச்சி் திட்டங்கள் குறித்து பொய்யான தகவல்களையே கூறியுள்ளார்.

அரசின் திட்டங்கள் குறித்தும், சாதனைகள் குறித்தும் பகிரங்க விவாதத்திற்கு மோடி தயாரா என்பதைத் தெரிவிக்க வேண்டும். விவாதிக்க நாங்கள் தயார்.

இன்க்ளூசிவ் பொலிட்டிக்ஸ் குறித்து மோடி பேசுகிறார். நல்ல விஷயம்தான். ஆனால் சிறுத்தை தனது உடலில் உள்ள புள்ளிகளை மாற்றிக் கொள்ள முடியுமா....? மோடியும் அப்படித்தான். அவரது குணத்தையும், நிறத்தையும் மாற்ற முடியாது.

காங்கிரஸ் மக்களை சக்தியாளர்களாக மாற்ற உழைக்கிறது. ஆனால் மோடி தன்னையே பலப்படுத்திக் கொள்ள முனைகிறார். சாய்ஸ் மக்களிடமே விடப்படுகிறது. மோடியா, காங்கிரஸா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+