For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேகாலயாவில் 3-ஆவது முறையாக காங்கிரஸின் "கை" ஓங்குகிறது : மண்ணை கவ்விய பாஜக

மேகாலயாவில் முதல் முறையாக பாஜக ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பை மக்கள் கொடுப்பார்களா என்பது இன்று தெரிய வந்துவிடும்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: மேகாலயா, திரிபுரா, நாகாலாந்து ஆகிய வட மாநிலங்களில் நடத்தப்பட்ட சட் டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இதில் மேகாலயாவில் காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியை தக்க வைத்துக் கொண்டு 3-ஆவது முறையாக ஆட்சி செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தலா 60 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட வடகிழக்கு மாநிலங்களான மேற்கண்ட மாநிலங்களில் மொத்தம் தலா 59 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டது. அதில் திரிபுராவுக்கு கடந்த 18-ஆம் தேதியும், மற்ற இரு மாநிலங்களுக்கு 27-ஆம் தேதியும் நடைபெற்றது.

பாஜக ஆட்சி

பாஜக ஆட்சி

இந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இதில் திரிபுரா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்றுள்ளது. ஆனால் மேகலாயாவில் இது வரை கூட்டணி கட்சிகள் மூலமாக கூட பாஜக ஆட்சியை பிடித்ததில்லை.

கடும் போட்டி

கடும் போட்டி

திரிபுரா மற்றும் நாகாலாந்தில் அந்த மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளது. இதனால் மேகாலயாவில் காங்கிரஸ் மற்றும் பாஜகவினரிடையே கடும் போட்டி நிலவுகிறது.

தாமரை மலருமா

தாமரை மலருமா

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக வெற்றி கொடியை நாட்டிவிட்டது. அது போல் தங்களது சாதனைகள் மூலம் வடகிழக்கு மாநிலங்களிலும் தாமரை மலரும் என்கின்றனர் பாஜகவினர்.

டப் வார்

டப் வார்

ஆனால் காங்கிரஸ் கட்சியும் தனது சாதக மற்றும் பாஜகவின் பாதகங்களை கூறி தங்களுக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் செய்தது. மேலும் மேகாலயாவில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருவதால் பாஜக தனித்தோ அல்லது மாநில கட்சிகளுடன் ஒட்டிக் கொண்டோ ஆட்சியை பிடிப்பது என்பது இயலாத ஒன்றும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதினர். அதன்படி இன்று வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை பார்க்கும் போது 3-ஆவது முறையாக காங்கிரஸ் ஆட்சி அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

English summary
Today Meghalaya, Nagaland and Tripura states polls counting result: Can BJP put foot steps in Meghalaya for the first time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X