ரயில் முன்பதிவு டிக்கெட் ரத்து செய்யும் கட்டணம் இனி இருமடங்கு- 12 ஆம் தேதி முதல் அமலாகின்றது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ரயில் முன்பதிவு டிக்கெட் ரத்து கட்டணம் இரு மடங்காக உயர்கிறது. இந்த புதிய முறை வருகின்ற 12 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ரயில்களில் பயணம் செய்வதற்கு முன் பதிவு செய்து விட்டு, அந்த டிக்கெட்டை ரத்து செய்து பணத்தை திரும்பப்பெறுவதற்கு ஒரு தொகையை ரயில்வே பிடித்து வருகிறது. டிக்கெட்டை ரத்து செய்வதற்கான இந்த தொகையை 12 ஆம் தேதி முதல் இரு மடங்காக உயர்த்தி ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ரயில் டிக்கெட் ரத்து கட்டண உயர்வு, ரயில் டிக்கெட் முன்பதிவு வசதியை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்காக அமல்படுத்தப்படுகிறது.
சாதாரண டிக்கெட் அதாவது முன் பதிவு இல்லாத டிக்கெட் வாங்குகிற கவுண்ட்டர்களில், ரயில் டிக்கெட் ரத்துக்கான பணத்தை பெற அனுமதிக்கவும் ரயில்வே முடிவு செய்துள்ளது.
புதிய முறை:
- ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன் டிக்கெட்டை ரத்து செய்தால் ஒவ்வொரு பயணிக்கும் குறைந்தபட்சம் 60 ரூபாய் முதல் அதிகபட்சம் 240 ரூபாய் வரை டிக்கெட்டின் கட்டண தொகைக்கு ஏற்ப பிடித்தம் செய்யப்படும்
- ரயில் புறப்படுவதற்கு முன் 48 முதல் 12 மணி நேரத்திற்குள் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் கட்டண தொகையில் 25 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.
- ரயில் புறப்படுவதற்கு முன் 12 முதல் 4 மணி நேரத்திற்குள் டிக்கெட்டுகளை ரத்து செய்தால் 50 சதவீத கட்டணம் திரும்பப் பெறலாம்.
- ரயில் புறப்படுவதற்கு முன் நான்கு மணி நேரத்திற்குள் ரத்து செய்யும் போது கட்டணத் தொகை திரும்ப கிடைக்காது.
- ஆர்.ஏ.சி, மற்றும் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படும் போது அதற்காக வசூலிக்கப்படும் கட்டணம் இனி இரு மடங்காக பிடித்தம் செய்யப்படும். ரயில் புறப்பட்ட பின் 30 நிமிடம் வரை டிக்கெட்டை ரத்து செய்யலாம். இதற்கு முன் இரண்டு மணி நேரமாக இருந்தது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications