ஜார்க்கண்ட்: ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் 1ம் வகுப்பு மாணவன் சாவு
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் கேள்விக்கு பதில் சொல்லத் தெரியாத ஒன்றாம் வகுப்பு மாணவரை ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் மாணவர் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த சிறுவனின் பெயர் சுர்ஜித், 7 வயதான இந்த மாணவன், ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சி புறநகர் பகுதியில் ராகசிய உக்ரமித் மத்ய வித்யாலயா எனும் தனியார் பள்ளியில்1ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 28-ந் தேதி அன்று ஆசிரியர் அர்சாத் உசேன் கேள்வி கேட்டதற்கு பதில் அளிக்க தெரியாததால் சுர்ஜித்தை பிரம்பால் அடித்தார்.
முதுகு பகுதியில் அடித்ததால் அவனுக்கு வலி அதிகமாக இருந்தது. இதனால் மறுநாள் ஆசிரியர் அடித்தது குறித்து பெற்றோரிடம் புகார் கூறினான். 29ம் தேதி பள்ளிக்கும் செல்லவில்லை. அவனது தாய் வலி நிவாரண மாத்திரை கொடுத்தார். இந்த நிலையில் ஞாயிறன்று காலை மாணவன் சுர்ஜித் இறந்தான்.
இது குறித்து மாணவனின் தந்தை மகேதோ முன்டா போலீசில் புகார் செய்தார். ஆசிரியர் பிரம்பால் அடித்ததால்தான் தனது மகன் இறந்ததாக போலீசில் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஆசிரியர் அர்சாத் உசேன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்ட கல்வி அதிகாரி ஜெயந்த் மிஸ்ரா அந்த ஆசிரியரை தற்காலிகள் நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications