காசோலை மோசடி விவகாரம் - தோனி உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு
(இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (ஜூன் 2) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.)
காசோலை மோசடி தொடா்பாக கிரிக்கெட் வீரா் மகேந்திர சிங் தோனி உட்பட 8 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக 'தினமணி' செய்தி வெளியிட்டுள்ளது.
பிகாரின் பெகுசராய் பகுதியில் உள்ள தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நியூ குளோபல் பிரட்யூஸ் இந்தியா என்ற நிறுவனம் மீது எஸ்.கே.எண்டர்பிரைசஸ் என்ற முகமை புகாா் மனு அளித்துள்ளது.
அந்தப் புகாா் மனுவின்படி, நியூ குளோபல் பிரட்யூஸ் இந்தியா நிறுவனத்திடம் இருந்து எஸ்.கே.என்டா்பிரைசஸ் முகமை உரம் வாங்கியுள்ளது. ஆனால் உரத்தை சந்தைப்படுத்துவதில் நியூ குளோபல் பிரட்யூஸ் இந்தியா நிறுவனம் ஒத்துழைப்பு வழங்காததால் எஸ்.கே.எண்டர்பிரைசஸ் முகமைக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து உரத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்ட நியூ குளோபல் பிரட்யூஸ் இந்தியா நிறுவனம், ரூ.30 லட்சத்துக்கான காசோலையை எஸ்.கே.எண்டா்பிரைசஸிடம் வழங்கியுள்ளது. அந்தக் காசோலையை வங்கியில் செலுத்திய போது, சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பியுள்ளது.
இதுதொடா்பாக சட்டரீதியாக நோட்டீஸ் அனுப்பியும் நியூ குளோபல் பிரட்யூஸ் இந்தியா நிறுவனத்திடம் இருந்து எந்தப் பதிலும் வராததால், நீதிமன்றத்தில் புகாா் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த உரத்தை மகேந்திர சிங் தோனி விளம்பரப்படுத்தியதால், அவா் உட்பட 8 பேரின் பெயர்கள் புகாா் மனுவில் சோ்க்கப்பட்டுள்ளது. அந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ள நிலையில், ஜூன் 28-ஆம் தேதி அடுத்தகட்ட விசாரணை நடைபெற உள்ளது.
உ.பி - கல்லூரி வளாகத்தில் தொழுகை செய்த பேராசிரியரை கட்டாய விடுப்பில் அனுப்பிய நிர்வாகம்
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் பகுதியில் உள்ள ஸ்ரீவார்ஷ்னே கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் கல்லூரி வளாகத்தில் தொழுகை நடத்தியதற்கு கிளம்பிய எதிர்ப்பால், அவரை ஒரு மாதம் கட்டாய விடுப்பில் கல்லூரி நிர்வாகம் அனுப்பியுள்ளதாக 'இந்து தமிழ் திசை' செய்தி வெளியிட்டுள்ளது.
அக்கல்லூரியின் சட்டத்துறை பேராசிரியராக எஸ்.ஆர்.காலீத் என்பவர் பணியாற்றி வருகிறார். இஸ்லாமியரான இவர், கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி வளாகத்தின் புல் தரையில் சிறப்புத் தொழுகை நிறைவேற்றியுள்ளார். இதை ஒரு மாணவர் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட, இதை கண்ட உத்தரபிரதேச இந்துத்துவா அமைப்புகள் பேராசிரியர் காலீத் கல்லூரி வளாகத்தில் தொழுகை நடத்தியத்தை கண்டித்தனர். மேலும், அலிகரின் மற்றொரு கல்வி நிறுவனமான டி.எஸ்.கல்லூரியின் மாணவர்கள் பேரவை சார்பில் அப்பகுதியின் குவார்ஸி காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டது.
இதில் நடவடிக்கை எடுக்கும் வரை உபியின் அனைத்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கும் போராட்டம் நடைபெறும் எனவும் மாணவர்கள் அறிவித்துள்ளனர். இதனால், வேறுவழியின்றி ஸ்ரீவார்ஷ்னே கல்லூரி நிர்வாகம் சார்பில் பேராசிரியர் தொழுகை நடத்தியது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- இந்திய பொருளாதாரம் மந்தநிலைக்குச் செல்கிறதா? ஜிடிபி வளர்ச்சி பற்றி ஓர் அலசல்
- எந்த சாதியையும், மதத்தையும் சேராதவர் என சான்று பெறுவது எப்படி?
- தமிழ்நாட்டில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் குறிவைக்கப்படுகிறார்களா?
விசாரணை முடியும்வரை, பேராசிரியர் காலீத்தை ஒரு மாதத்திற்காகக் கட்டாய விடுப்பிலும் கல்லூரி நிர்வாகம் அனுப்பியுள்ளது.
பாலியல் வன்கொடுமை வழக்கு - நாடு திரும்பிய மலையாள நடிகர்
பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மலையாள நடிகரும், சினிமா தயாரிப்பாளருமான விஜய்பாபு, 39 நாட்கள் கழித்து நாடு திரும்பியுள்ளதாக 'தினந்தந்தி' செய்தி வெளியிட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த நடிகரும், சினிமா தயாரிப்பாளருமான விஜய்பாபு மீது மலையாள நடிகை ஒருவர், தன்னை வீட்டுக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறியிருந்தார். இதையடுத்து நடிகர் விஜய் பாபு, அந்த நடிகையைப் பற்றி சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டார்.
இது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விஜய்பாபுவை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். காவல்துறை தன்னை தேடுவதை அறிந்ததும் விஜய்பாபு, வெளிநாட்டுக்கு தப்பி சென்றார். மேலும், வெளிநாட்டில் இருந்தபடியே, அவர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இ அதன் பின்பு அவர் நாடு திரும்பவில்லை. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவர் கேரளா திரும்பி விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராகும்படி உத்தரவிட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்வதாகவும், அதுவரை விஜய்பாபுவை கைது செய்ய கூடாது எனவும் நீதிமன்றம் கூறியது.
இந்நிலையில், 39 நாட்களுக்கு பிறகு, இன்று அவர் கேரளா திரும்பினார். கொச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "இந்த வழக்கில் வேண்டுமென்றே என்னை சிக்கவைத்து உள்ளனர். வழக்கு விசாரணையின் போது நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன்," என்றார்.
https://www.youtube.com/watch?v=xtIiYMOiidw
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?















Click it and Unblock the Notifications