கடலில் பரபரப்பு.. இந்திய மீனவர் சுட்டுக்கொலை... பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் 10 பேர் மீது வழக்கு..!
பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் 10பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
காந்திநகர்: இந்திய மீனவர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் 10 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் போர்பந்தரின் ஓகா கடற்கரையிலிருந்து கடந்த 25-ம் தேதி 7 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்கள்.. நேற்று முன்தினம் இந்திய கடல் எல்லையில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பிஎம்எஸ்ஏ எனப்படும் பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு முகமை (பாகிஸ்தான் கடற்படையினர்) அத்துமீறி தங்கள் நாட்டு எல்லைக்கு வந்து விட்டதாக கூறி இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் அங்கேயே சுருண்டு விழுந்து இறந்தார்.. மேலும் திலிப் சோலங்கி என்ற மீனவர் ஒருவர் படுகாயம் அடைந்தார்..

துப்பாக்கி சூடு
அவருக்கு குஜராத் மாநிலம் ஓகாவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் கடற்படை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் யார் என்ற அடையாளம் வெளியாகி உள்ளது.. அவர் பெயர் ஸ்ரீதர் ரமேஷ் சாம்ரே.. மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தை சேர்ந்தவர்.. 32 வயதாகிறது.. இவரது சடலம் நேற்றைய தினம் ஓகா துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது... அத்துடன் நடந்த சம்பவம் தொடர்பாக நவி பந்தர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எப்ஐஆர்
பாகிஸ்தான் கடற்படையைச் சேர்ந்த 10 வீரர்கள் மீது போர்பந்தர் மாவட்டம் நபி பந்தர் போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர். கொலை, கொலை முயற்சி மற்றும் ஆயுத சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத பாகிஸ்தான் கடற்படை வீரர்கள் 10 பேர், 2 படகுகளில் வந்து இந்திய மீன்பிடி படகு மீது தாக்குதல் நடத்தியதாக எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது.

விளக்கம்
இதுகுறித்து பாகிஸ்தான் கடற்படை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது... அதில், இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் கடற்பகுதியில் சட்டவிரோதமாக அத்துமீறி நுழைந்தனர்.. அந்த படகில் இருந்தவர்களை திரும்பி செல்லும்படி எச்சரித்தோம். ஆனால் அவர்கள் கேட்கவில்லை.. தொடர்ந்து முன்னேறி சென்றனர்.. அதனால்தான் துப்பாக்கிச்சூடு நடத்தினோம்" என்று தெரிவித்துள்ளது.

ராஜதந்திரம்
இதுகுறித்து இந்திய கடற்படை அதிகாரி ஒருவர் சொல்லும்போது, ''நடந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் தரப்புடன் ராஜதந்திர ரீதியாக எடுத்து செல்ல போகிறோம்.. இந்த விவகாரம் விசாரணையில் தற்போது உள்ளது, இன்னும் கூடுதல் விவரங்களை சரியான நேரத்தில் தெரிவிப்போம்" என்றார்.. ஆனால், அரேபிய கடலில் பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் தெளிவான கடல் எல்லை இல்லை என்று கூறப்படுகிறது... இதனால் இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக நுழைந்து விட்டதாக கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, அவர்களது படகுகளை பறிமுதல் செய்தல் போன்ற நடவடிக்கையை பாகிஸ்தான் தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம்












Click it and Unblock the Notifications