பீகார் சட்டசபை தேர்தலுக்காக ஜாதிவாரி கணக்கெடுப்பு? மக்களும் நம்பி ஓட்டுப் போடுவாங்க என்ன?
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் தற்போது, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிவித்துள்ளது.. பீகார் தேர்தல் களத்தில், ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி உரிய இடஒதுக்கீடு வழங்குவது உறுதி என தேர்தல் பிரசாரம் செய்வதற்கான ஆயுதமாகவே பாஜக கூட்டணி இதனை கையில் எடுக்கும் என்பது உறுதியான ஒன்றுதான்.
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து அனைத்து மாநிலங்களும் பேசிக் கொண்டிருந்தன. அந்த தருணத்தில் பீகாரில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திவிட்டோம் என பிரகடனம் செய்தது பீகார் மாநில அரசு. இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் இடஒதுக்கீட்டிலும் மாற்றங்களை கொண்டு வந்தது பீகார் மாநில அரசு. ஆனால் உச்சநீதிமன்றம் தலையிட்டதால் பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பிலான இடஒதுக்கீடு ரத்தாகிப் போனது.

இருந்தபோதும் இதே பாணியில் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆயுதத்தை கையில் எடுத்தன. தமிழ்நாட்டிலும் பீகார் போல, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என திமுக அரசுக்கு நெருக்கடி தரப்பட்டது. ஆனால் திமுக அரசோ, மத்திய அரசுதான் இதனை செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது.
இந்த பின்னணியில்தான் பீகார் சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் பலியான துயரமான தருணத்திலும் கூட பிரதமர் மோடி, பீகார் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க கூடவில்லை. அந்த அளவுக்கு பாஜக, பீகார் தேர்தலை மிக முக்கியமானதாகப் பார்க்கிறது. பீகாரின் தற்போதைய முதல்வர் நிதிஷ்குமாரின் தயவில்தான் மத்தியில் ஆட்சியே நடைபெற்று வருகிறது. இதனால் பீகார் தேர்தலில் நிதிஷ்குமாரின் ஜேடியூ தலைமையில்தான் கூட்டணி என இறங்கிப் போயிருக்கிறது பாஜக. பீகார் சட்டசபை தேர்தலில் வெல்வதும், பீகாரின் முதல்வராக நிதிஷ்குமார் நீடிப்பது என்பதும்தான், மத்தியில் ஆளும் பாஜக அரசை காப்பாற்றிக் கொள்வதற்கான முக்கியமான பிரச்சனை.
பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி தோல்வி அடைந்து நிதிஷ்குமார் முதல்வராக முடியாமல் போனால், மத்திய அரசுக்கான ஆதரவை நிச்சயம் வாபஸ் பெறுவார் என்பதை பாஜக அறியாமல் அல்ல. ஆகையால் தலைகீழாக நின்று குட்டி கரணம் அடித்தாவது பீகாரில் பாஜக கூட்டணி வெல்லத்தான் போராடும். இதனாலேயே சவாலான முடிவான, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது என்கிற முடிவெடுத்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக அறிவித்துவிட்டதை வைத்தே பீகார் தேர்தலை எதிர்கொண்டுவிடலாம் என நம்புகிறது பாஜக. ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டு களத்தில் பிறந்த சமாஜ்வாதி கட்சி, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என இடைவிடாமல் பேசிவரும் ராகுல் காந்தியின் காங்கிரஸ் கூட்டணியும் இது தங்களது கொள்கை; தங்களுக்கான வெற்றி என இப்போதே கூப்பாட்டை தொடங்கிவிட்டன; பீகார் தேர்தல் களத்தில் சொல்லவா வேண்டும்.
பீகார் தேர்தல் களத்தில் தங்களது 'ஜாதிவாரி கணக்கெடுப்பு' கொள்கையை முழங்கிவிடுவதாலேயே அந்த மாநில மக்களும் தங்களது கட்சிகளை நம்பி வாக்குகளை அள்ளிக் கொட்டிவிட்டுதான் மறுவேலை பார்க்கப் போகிறார்கள் என்கிற மிதப்பில் இருக்கும் பாஜக கூட்டணியின் கனவு நிறைவேறுமா என்பது தேர்தல் முடிவுகளே சொல்லப் போகின்றன.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications