பெங்களூர் மெட்ரோ ரயிலில் பெண்களிடம் சில்மிஷம்.. கண்டுகொள்ளாத போலீஸ்
பெங்களூர்: பெங்களூர் மெட்ரோ ரயிலில் இரண்டு பெண்களிடம் விஷமத்தனம் செய்த நான்கு ஆபாச இளைஞர்கள் ரகசியக் கேமராவில் சிக்கியுள்ளனர். அவர்களை உடனடியாக பிடிப்பதற்குப் பதில் கோட்டை விட்டு இப்போது பிரச்சினை பெரிதாகியுள்ளதால் தேடி வருகிறது பெங்களூர் போலீஸ்.
12 நாட்களுக்குப் பிறகு இந்த இளைஞர்களை போலீஸார் ரகசியக் கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் கண்டுள்ளனர். அதேசமயம், பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரை மெட்ரோ அதிகாரிகள் அலட்சிய பாவத்துடன் கையாண்டதும் அனைவரையும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.

இத்தனைக்கும் இந்த பொறுக்கி இளைஞர்கள் அந்தப் பெண்ணை காவலர்கள், அதிகாரிகள் முன்பு கேலி செய்து சில்மிஷம் செய்தபோது யாருமே தட்டிக் கேட்கவில்லை என்பதுதான் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் அபயக் குரல் எழுப்பி உதவி கோரியும் யாருமே உதவிக்கு வரவில்லை. பாதுகாவலர்கள் உள்ளிட்டோர் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர். சம்பந்தப்பட்ட பெண் கல்லூரி மாணவி ஆவார். அக்டோபர் 12ம் தேதி மெட்ரோ ரயிலில் பயணித்தபோதுதான் இந்த விபரீதம் நடந்துள்ளது.
இதுகுறித்து அந்தப் பெண் கூறுகையில், மெட்ரோ பாதுகாவலர்கள், அதிகாரிகள் முன்னிலையில் என்னை அந்த நால்வரும் மிரட்டினர், கேலி செய்தனர், சீண்டினர். யாருமே எனக்கு உதவிக்கு வரவில்லை. அனைவரும் அவர்களை அமைதிப்படுத்தி அனுப்புவதிலேயே குறியாக இருந்தனர். நடந்த தவறை கண்டிக்கவில்லை. அவர்களைத் தடுக்கவும் இல்லை. மேலும் இதை பிரச்சினையாக்க வேண்டாம் என்றும் என்னைக் கேட்டுக் கொண்டனர்.
பின்னர் என்னை காவல்துறையில் சென்று புகார் கொடுக்குமாரு அவர்கள் அறிவுறுத்தினர். நான் மெட்ரோ அதிகாரிகளுக்கும் எழுத்துப்பூர்வமான புகார் கொடுத்துள்ளேன் என்றார்.
இதற்கிடையே, அந்த மாணவியையும், வீனு ஆல்பர்ட் என்ற இன்னொருவரையும், அந்த நான்கு இளைஞர்களும் ரயிலில் நிலையத்தில் கிண்டல் செய்து மிரட்டியது சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ காட்சி தற்போது கிடைத்துள்ளது. மெட்ரோ பாதுகாவலர்களிடம் அவர்கள் இருவரும் முறையிடுவதும், உதவி கேட்பதும் தெளிவாக காட்சியாக பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் அந்த நால்வரையும் மெட்ரோ பாதுகாவலர்கள் தங்களது அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. ஆனால் போலீஸாரை கூப்பிடவேயில்லை மெட்ரோ அதிகாரிகள். மேலும் பாதிக்கப்பட்ட மாணவி போலீஸில் கொடுத்த புகாரும் பத்து நாட்களுக்கு மேல் கண்டு கொள்ளப்படாமலேயே இருந்துள்ளது. இப்போதுதான் அந்தப் புகாரைப் பதிவு செய்துள்ளனர். தற்போது அந்த நால்வரையும் தேடத் தொடங்கியுள்ளனர் போலீஸார்.
இந்த விவகாரம் பெரிதாகியுள்ளதால் தற்போது நால்வரையும் போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனராம்.
எம்.ஜி. சாலையிலிருந்து பையப்பனஹள்ளி சென்ற மெட்ரோ ரயிலில்தான் இந்த விவகாரம் நடந்துள்ளது.
நால்வர் குறித்த விவரம் தெரிந்தால்...
இந்த நான்கு ஆபாச இளைஞர்கள் குறித்த விவரம் தெரிந்தவர்கள் அதைத் தெரிவிக்கலாம் என்று காவல்துறை அறிவித்துள்ளது. 100 எண்ணுக்கு அழைத்துச் சொல்லலாம். அல்லது அல்சூர் காவல் நிலையம் - 9480801226 22942540, இந்திரா நகர் காவல் நிலையம் 9480801228 22942541 ஆகியவற்றுக்குத் தகவல் சொல்லலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications